மாவீரன் படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை என்று இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்த்து வைத்து இருக்கிறார். தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள்.

Advertisement

மாவீரன் படம்:

அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது. பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்.

படத்தின் கதை:

அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். அதோடு முதல் நாளில் மட்டுமே இந்த படம் ஒன்பது கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

படத்தின் வசூல்:

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மடோன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை சில உண்மையான நிகழ்வுகளை மையப்படுத்தி தான் எடுத்துள்ளோம். ஆனால், யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சென்னை கேபி பார்க் ஹவுசிங் போர்டு பிரச்சனையை தான் இதற்கான ரெஃபரன்ஸாக வைத்துக் கொண்டேன். ஆனால், யாரையும் குறிப்பிட்டு படம் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement

உண்மை சம்பவமா :

இந்தியாவில் முதன்முறையாக 1970 இல் தான் குடிசை மாற்று வாரியம் கொண்டுவரப்பட்டது. இது ஏழை எளிய மக்களுக்கும் மிக குறைந்த விலையில் வீடு கட்டி கொடுக்கும் திட்டம். அதன் பின் 2021 ஆம் ஆண்டில் புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் வளாகத்தில் பத்து மாடிகளில் சுமார் 1920 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மக்கள் குடிபெயர்ந்து இருந்தார்கள். அப்படி சென்ற ஒரு கட்டடம் தரம் மற்றதாக இருந்தது. இதனால் சுவர்பகுதிகள் தொட்டாலே இடிந்து விழுந்தது. இந்த பிரச்சினை குறித்து செய்தி வெளியானதும் பெரிய விஷயமாக மாறியது. அதன் பின் கோர்ட்டில் கேஸ் நடந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் கூறியது.

Advertisement