மைக்கல் ஜாக்சன் இறக்க வில்லை இவருக்கு டிஎன்ஏ test செய்யுங்கள். வலியுறுத்தும் ரசிகர்கள்!!.

0
24467
- Advertisement -

-விளம்பரம்-

மைக்கல் ஜாக்சன் தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என்று ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்டவர். பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியவர். உலக மக்களை தன்னுடைய பாப் இசை ஆளும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்க வைத்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். அதோடு குக்கிராமத்தில் கூட ஒரு சிறுவன் நன்றாக நடனம் ஆடினால் ‘குட்டி மைக்கேல் ஜாக்ஸன் ’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவரது புகழ் உலக முழுவதும் பரவியிருந்தது. இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் ஜாக்சன். 11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பாப் இசையை தொடங்கினார்.

- Advertisement -

மேலும், பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை மைக்கல் ஜாக்சன் படைத்தார். மேலும், மக்களின் மத்தியில் 40 ஆண்டு காலமாக புகழ் பெற்றவராக வாழ்ந்து வந்தார் மைக்கல் ஜாக்சன். 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது வரை இவருடைய இறப்பிற்கு என்ன காரணம் என்று இன்னும் வரை அறிவிக்கப்படவில்லை. இவருடைய நடனத்திற்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்த நபர் செர்ஜியோ கோர்டெஸ்.

தற்போது செர்ஜியோ கோர்டெஸ் பாப் மூலம் உலக அளவில் வளர்ந்து வரும் கலைஞராகத் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக ஒரே மாதிரி காணப்படுகிறார். இவர் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடியும் வருகிறார். இதனால் பெருமளவு புகழ் பெற்றும் பிரபலமாகி உள்ளார். சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதில் அவர் கூறியது, அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

-விளம்பரம்-

எனது இசை நிகழ்ச்சியை நீங்கள் பாருங்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் எல்லோரும் வியந்த போனார்கள். உண்மையான மைக்கேல் ஜாக்சன் இவர் தான் என்றும் கூறினார்கள். மேலும், மைக்கேல் ஜாக்சன் அவர்கள் மறைந்து வாழ்வதற்காக தான் இந்த மாதிரி இறந்து விட்ட நாடகத்தை நடத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் செர்ஜியோ கோர்டெஸ்க்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து செர்ஜியோ கோர்டெஸ் கூறியதாவது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர் நீங்கள் மைக்கல் ஜாக்சன் தோற்றத்தில் உள்ளீர்கள் என்று கூறினார்கள். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப் போட்டு போட்டோ எடுத்தார்கள். பின் அவர்கள் அந்த புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிட்டார்கள். முதலில் நான் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் எனது புகைப்படத்தை திரவியம் போன்ற பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தினார்கள். இது எல்லாம் என் அன்றாட வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது தவிர வேறு எந்த காரணமும் கிடையாது என்று கூறினார்.

Advertisement