தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார்.

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் 'தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : கழட்டிவிட்ட விஜய் டிவி புதிய அவதாரம் எடுத்த ரக்ஷிதா - சீரியல் இவருக்கே செட் ஆகாதோ.
தளபதி 66 படம்:
மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
https://twitter.com/WalkMan_Ajith/status/1543517932529291264
தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு:
ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் உருவாகி இருந்த விக்ரம் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.
விக்ரம் படத்தால் பிரபலமான lcu :
விக்ரம் படம் ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான விக்ரம், கார்த்தி நடித்த கைதி போன்ற படத்தின் தொடர்ச்சியை போலவே இருந்தது. மேலும், இந்த படத்தில் சூர்யா கிளைமாக்சில் வந்து அசத்தி இருந்தார். அவரின் என்ட்ரி அடுத்த பாகத்திற்கு வித்துட்டு இருக்கிறது. இதனால் ஹாலிவுட்டில் வருவது போலவே தமிழிலும் ஒரு மல்டி யுனிவர்ஸ் மாயியை லோகேஷ் உருவாக்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 LCU-வில் இணையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
https://twitter.com/SanthoshNanban/status/1543575154332028933
தளபதி 67 LCU-வில் இணையுமா?
இதற்கு பதில் அளித்த லோகேஷ் 'தளபதி 67 படத்தின் அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வெளியாகும் முன் என்னால் பேச முடியாது. மேலும் தளபதி 67 திரைப்படம் LCU இணையுமா என்பது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் நாள் மாலையில் நான் அறிவித்து விடுகிறேன் ' என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ஒரு பேட்டியில் இனி இயக்கம் படங்கள் விக்ரம் படத்தின் யுனிவர்ஸ்சுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, விஜய்யும் Lcuவில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது.





