சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் மட்டுமில்லாமல் உலக அளவில் சினிமா உலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயம் காப்பி. தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களுக்கு ரசிகர்கள் சுலபமாக படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். மேலும், ரசிகர்களால் அதிகம் சமூகவலைத்தளங்களில் கண்காணிக்கப்படுவது சினிமா விஷயங்கள் தான். முதலில் பஸ்ட் லுக் காப்பி, அப்புறம் சிங்கிள் ட்ராக் பாடல் காப்பி, கடைசியில் படமே காப்பி என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இதனால் சோசியல் மீடியாவில் மட்டுமில்லாமல் சினிமா உலகிலும் பல பிரச்சினைகள் எழுகிறது.
அதோடு சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் இந்த காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளவர் இயக்குனர் அட்லீ. இதனாலேயே இவரை காப்பி சர்ச்சை மன்னன் என்றும் கூறுகிறார்கள். அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மௌன ராகம் படத்தின் தழுவல் என்றும், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் என பல படங்கள் கலந்த கலவை என்றும், பிகில் படம் வேறு ஒரு இயக்குனரின் கதை என்று சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் காப்பி என்று புகார்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே போல் அட்லீக்கு பிறகு சர்ச்சை நாயகனாக இருப்பது நம்ம அனிரூத் தான். சில காலமாகவே அனிருத் இசையில் வரும் பாடல்கள் எல்லாம் சாமி பாடல்களின் ட்யூன் என்று சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. அது என்னவென்றால், ஏற்கனவே நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்க இருந்த டாக்டர்ஸ் படத்தின் போஸ்டரை தழுவி தான் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் தான் டாக்டர்ஸ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. சிவகார்த்திகேயன் எப்படி ஒரு சேரில் ஸ்டைலாக அமர்ந்து கொண்டிருக்கிறாரோ அதே போன்று தனுஷும் பல வருடங்களுக்கு முன்பு வெளியான டாக்டர்ஸ் பட போஸ்டரில் உட்காந்திருக்கிறார். தனுஷ் நடிக்க இருந்த டாக்டர்ஸ் படத்தின் கதையை தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போஸ்டர் இன்ஸ்பிரேஷன் போல ஃபர்ஸ்ட் லுக் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் அவர்கள் கபாலி ரஜினி போல நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.