நிறைவடைய இருக்கிறதா ஜீ தமிழின் முக்கிய சீரியல் – ஆமா, அவரே போய்ட்டாரே. அப்புறம் என்ன பண்ணுவாங்க.

0
1845
zee-tamil
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Yaaradi Nee Mohini: Check Out Muthurasan And Vennila's Love Story So Far  Before Lockdown - ZEE5 News

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ சீரியல் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தனர்.

இதையும் பாருங்க : இத கூட மத்தவங்கள பாதிக்காத மாதிரி சொல்றீங்களே – விபத்தில் சிக்கிய கோமாளியின் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்.

- Advertisement -

ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் வில்லியாக ஸ்வேதா என்ற முக்கிய கதாபத்திரத்தில் வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்வீதா கதாபாத்திரம் இறந்துவிட்டது போல காண்பிக்கப்பட்டு இருந்தது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக இருந்து வந்த ஸ்வேதா இறந்துவிட்டதால் இனி இந்த கதையில் ஸ்வாரசியம் இருக்குமா என்பதில் சந்தேகமே எனவே, இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement