இத கூட மத்தவங்கள பாதிக்காத மாதிரி சொல்றீங்களே – விபத்தில் சிக்கிய கோமாளியின் பதிவால் நெகிழ்ந்த ரசிகர்கள்.

0
3349
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் சமீபத்தில் இந்த சீசனில் கோமாளியாக பங்குபெற்று வரும் மணிமகேலைக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள மணிமேகலை, ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் , நான் நலமாக இருக்கிறேன். குக்கு வித் கோமாளி செட்டை இரண்டு வாரம் மிஸ் செய்வேன். மற்ற நிகழ்ச்சி ஷூட்டிங்கை ஒரு வாரம் மிஸ் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் மணிமேகலை விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். அதே போல தனக்கு ஏற்பட்ட காயத்தை கூட இப்படி வேடிக்கையாக சொல்லி இருக்கும் மணிமேகலையின் இந்த குணத்தை குறிப்பிட்டுள்ள ரசிகர் ஒருவர், இப்படி ஒரு சீரியஸான விஷயத்த கூட காமெடியா சொல்றீங்களே. அடுத்தவங்க மனச பாதிக்காத மாதிரி என்று உருக்கமுடன் பதிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement