பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுளீர்களா ? பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபனாக பதில் சொன்ன ஐஸ்வர்யா மேனன்.

0
1190
iswaryameon
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகை நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு பிரேம்களில் தோன்றியவர்கள் தான். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக திகழ்ந்து வரும் இவரும் தமிழில் சூப்பர் ஹிட் அடித்துள்ள தென்றல் தொடரில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
iswarya

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2009 ஆம் ஆண்டு தொடங்கி 6 வருடங்கள் ஓடிய இந்த தொடர் 1340 எபிசோடுகளை கடந்து மெகா ஹிட் ஆனது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபக்கும் சுருதியும் நடித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 2k கிட்ஸ்ஸின் Crush.

- Advertisement -

தென்றல் தொடர் :

அது வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா மேனன் தான். 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தீயா வேலை செய்யணும் குமாரு :

ஆனால், அந்த படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார்.அதே போல காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.ஆனால், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

-விளம்பரம்-

2k கிட்ஸ்களின் Crush :

ஆனால், இவர் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டது என்னவோ ‘தமிழ் படம் 2’ மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் ‘நான் சிரித்தாள்’ படத்திலும் நடித்திருந்தார். படத்தில் நடித்ததை விட இவருக்கும் ரசிகர்கள் கூடியது என்னவோ சமூக வளைதளம் மூலம் தான். அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஐஸ்வர்யா மேனன் 2k ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து இருக்கிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஐஸ்வர்யா :

இது ஒரு புறம் இருக்க நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்ற ஒரு சர்ச்சையும் எழுந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் போட்டியில் பங்கேற்ற ஐஸ்வர்யா மேனனனிடம் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது இதற்கு பதில் அளித்த அவர் ‘நாம் கடைசி மாதம் எடுத்த புகைப்படத்திற்கும் தற்போது எடுத்த புகைப்படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம் அவ்வாறு Grooming செய்து இருப்போம். எனவே, இது போன்ற நெகடிவ் விஷயங்களை கண்டுகொள்ளக்கூடாது. என்னை விரும்புவார்கள் பலர் இருக்கின்றனர். அதை மட்டும் பார்க்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement