இளசுகளின் லேட்டஸ்ட் கிரஸ். ஏற்கனவே இந்த படத்தில் நடித்துள்ளாரா. யாருனு தெரியுதா?

0
3328
aishwarya

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகை நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு பிரேம்களில் தோன்றியவர்கள் தான். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக திகழ்ந்து வரும் இவரும் ஒருவர் தான்.

தீயா வேல செய்யணும் குமாரு படத்தில் ஐஸ்வர்யா மேனன்

அட, வேறு யாரும் இல்லைங்க இவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் தான். 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான்.

- Advertisement -

ஆனால், அந்த படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார்.அதே போல காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார். அதன் பின்னர் ஒரு சில கன்னட மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

காதலில் சுதப்புவது எப்படி படத்தில் ஐஸ்வர்யா மேனன்

மேலும், தமிழில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “வீரா ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், இவர் மிகவும் அறியப்பட்டது அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம் 2’ படத்தில் தான். இறுதியாக ஜிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தாள்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement