அருவிக்கு அருகில் சென்ஷேஷினல் போட்டோஷூட் – ட்ரெண்டிங்கில் வந்த ஐஸ்வர்யா மேனன்.

0
2022
iswarya
- Advertisement -

இந்த கொரோனா வந்தாலும் வந்துச்சி வீட்டிற்குள்ளேயே இருக்கும் நடிகைகளுக்கு புது புது ஐடியாக்கள் வருகிறது. தற்போது கொரோனா பிரச்சனையால் சினிமா ஷூட்டிங் எதுவும் இல்லாததால் பல நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் வீட்டில் இருந்தபடி எப்படி உடற் பயிற்சி செய்வது என்று டிப்ஸ் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் நாயை வைத்து உடற் பயிற்சி செய்வது எப்படி என்பதைசமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகை நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு பிரேம்களில் தோன்றியவர்கள் தான். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஒருவர் தான்.

- Advertisement -

இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான்.ஆனால், அந்த படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார்.அதே போல காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.

மேலும், தமிழில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “வீரா ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால், இவர் மிகவும் அறியப்பட்டது அகில உலக சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம் 2’ படத்தில் தான். இறுதியாக ஜிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தாள்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் அருவியின் அருகில் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களால் தற்போது இவர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

Advertisement