இயற்கை பட நடிகையா இது. திருமணத்திற்கு பின் எப்படி இருக்கார் பாருங்க.

0
51189
Iyarkai-movie
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் சாம், அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் இயற்கை. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ராதிகா. மேலும், இவர் தமிழ் படத்தில் நடித்ததால் ‘குட்டி ராதிகா’ என்று செல்லமாக அழைத்தார்கள். மேலும்,1986 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் நடிகை குட்டி ராதிகா. இவர் தன்னுடைய 13 வயதிலேயே சினிமா உலகிற்கு வந்தார். அதோடு 2002 ஆம் ஆண்டு ‘நிணங்கி’ என்ற கன்னட படத்தில் தான் இவர் அறிமுகமானார். அந்த படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. மேலும், அதே ஆண்டில் 5 படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ரத்தன் குமார் என்ற நபருடன் நடிகை ராதிகாவிற்கு 2000 ஆம் ஆண்டே திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், தற்போது ராதிகா அவர்கள் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பதால் அவருக்கு திருமணம் ஆன விஷயத்தை அவருடைய தந்தை தேவராஜ் அவர்கள் மறைத்து உள்ளார் என்று வழக்கு பதிவு செய்து உள்ளார்கள். மேலும், இதனை தொடர்ந்து நடிகை ராதிகா மீதும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டு ரத்தன் குமார் அவர்கள் திடீர் என்று மாரடைப்பால் காலமானார் என்று தகவல் வெளியானது. மேலும், நடிகை ராதிகா அவர்கள் கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவர் இதை தவிர தமிழில் மட்டும் ஐந்து படங்களில் நடித்து உள்ளார். அதோடு 2008-ஆம் ஆண்டு வரை தான் ராதிகா அவர்கள் சினிமா துறையில் பல படங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளாகவே சினிமா பக்கம் காணவில்லை. இவர் திடீரென்று சில காலம் சினிமா துறையில் காணாமல் போனதால் ஒரு கட்டத்தில் இவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் திரை உலகினருக்கு வந்தது. பின்னர் திடீரென்று 2010 ஆம் ஆண்டு நடிகை குட்டி ராதிகாவுக்கும்,கன்னட முதலமைச்சர் குமாரசாமிக்கும் திருமணம் ஆனது என்ற தகவல் வெளிவந்தது. அதுவும் இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டே திருமணம் செய்து விட்டார்கள் என்றும் தெரிய வந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது என்று கூறினார்கள்.

மேலும்,இந்த தகவல் இணையங்களில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது என்றும் சொல்லலாம். இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை குட்டி ராதிகா அவர்கள் 2013 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இவர் தற்போது காண்ட்ராக்ட்,பைர தேவி, ராஜ போபண்ணா போன்ற கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை குட்டி ராதிகா கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட கதையில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தமயந்தி என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த படத்தை நவரசன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் வெளிவர போகிறது. இந்தப்படம் மலையாளம்,ஹிந்தியில் மட்டும் டப் செய்து வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்த படம் 1990 ஆம் ஆண்டு நடந்த கதையை மையப்படுத்தி ஹாரர், திரில்லர் கலந்த கலவையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் குட்டி ராதிகா இளவரசியாக நடித்துள்ளார். மேலும், இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது

Advertisement