ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி நடித்துள்ள ‘ஜே பேபி’ எப்படி ? – இதோ விமர்சனம்.

0
210
- Advertisement -

மகளிர் தினத்தன்று பெண்மையை போற்றும் வகையில் தாய்மையின் பாசத்தை மையமாக வைத்து இருக்கும்வெளியாகி படம் ஜே பேபி. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஊர்வசி, தினேஷ்,மாறன் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினேஷ்-மாறன் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் தாய் ஊர்வசி அவர்கள் குடும்ப பிரச்சினை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாள் ஊர்வசி மன உளைச்சல் தாங்க முடியாமல் தொலைந்து விடுகிறார். இதை அறிந்த இவருடைய பிள்ளைகளான தினேஷ் -மாறன் இருவருமே போலீசில் புகார் கொடுக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது போலீஸ் விசாரணையில் ஊர்வசி மேற்கு வங்கத்தில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அறிந்து தினேஷ்- மாறன் இருவரும் தன்னுடைய தாயை மீட்டு வருவதற்காக கொல்கத்தா செல்கிறார்கள். இன்னொரு பக்கம் குடும்ப பிரச்சனை காரணமாக தினேஷ்- மாறன் இருவருமே பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இறுதியில் தினேஷ்- மாறன் இருவரும் குடும்ப பிரச்சினை மறந்து பேசிக் கொண்டார்களா? இவர்கள் தங்களுடைய தாயை மீட்டார்களா? என்ன குடும்ப பிரச்சனை ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதி கதை.

இது ஒரு சாதாரண குடும்ப கதை. இதனாலே படத்தின் ஆரம்பத்தில் சுவாரசியமாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. கதைப்போன போக்கில் படம் நகர்ந்து கொண்டு இருந்த நகர்கிறது. ஒருவருவுடைய குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை இயக்குனர் காண்பித்து இருக்கிறார். முதல் பாதி முழுக்கவே ஊர்வசி வராமல் அவருடைய பெயர் மட்டும் தான் சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

இரண்டாம் பாதியில் தான் ஊர்வசி உடைய நடிப்பை காண்பிக்கிறார்கள். படத்திற்கு என்ன தேவையோ அதை ஊர்வசி செய்திருக்கிறார். ஊர்வசியின் நடிப்பு நம்மை இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறது. இரண்டாம் பாதியை சுவாரசியமாக வைக்க இயக்குனர் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் நன்றாக இருக்கும். அண்ணன், தம்பியாக வரும் மாறன்- தினேஷ், ஊர்வசி ஆகியவை சுற்றி தான் கதை முழுக்க நகர்கிறது. இவர்கள் மூவரின் உடைய நடிப்பும் நன்றாக இருக்கிறது.

மேலும், இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களையே அழ வைத்து இருக்கிறார் இயக்குனர். படத்தில் நிறைய மெசேஜ்களையும் சொல்லி இருக்கிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், சில இடங்களில் சீரியல் போல இழுத்து கொண்டு இருக்கிறது. முதல் பாதியிலேயே படத்தின் முடிவு என்னவென்று தெரிந்து விட்டதால் சில காட்சிகள் சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து விட்டார் இயக்குனர். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

ஊர்வசியின் நடிப்பு சிறப்பு

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

முதல் பாதி மெதுவாக செல்கிறது

சில இடங்களில் தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்

எளிமையான கதையாக இருந்தாலும் சுவாரசியமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்

மொத்தத்தில் ஜே பேபி – நல்ல முயற்சி

Advertisement