இன்னும் மாமன்கள், சித்தப்பன்கள் எல்லாம் மாட்டாம இருக்காங்க – புதுச்சேரி சிறுமி இறப்பு குறித்து ரஞ்சித் வேதனை.

0
520
- Advertisement -

புதுச்சேரி சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் மட்டும் இல்லாமல் தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்- மைதிலி தம்பதியினர்.

-விளம்பரம்-

இவர்களுக்கு 9 வயதில் ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் தன் மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருந்தார்கள். நான்கு நாட்கள் ஆகியும் ஆர்த்தி கிடைக்கவில்லை. பின் ஒரு கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலமாக ஆர்த்தி கிடைத்து இருக்கிறார்.

- Advertisement -

புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்:

இதனை அடுத்து போலீசார் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டு தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. பின் போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இது சம்பந்தமாக போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கஞ்சா குடிக்கும் 19 வயது இளைஞனும், 58 வயது கொண்ட முதியவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை:

பின் விசாரணையில், அந்த இளைஞர் சிறுமிக்கு மொட்டை மாடியில் பாலியல் தொல்லை கொடுத்த போது அதை பார்த்த முதியவரும் தன்னுடன் சேர்ந்து கொண்டதாகவும் சிறுமி ரொம்ப கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடித்த அடியில் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதை அறிந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

பா ரஞ்சித் பதிவு:

இது குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய், கமல்ஹாசன் உட்பட பலர் கண்டித்து பதிவு போட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், புதுச்சேரி சிறுமி படுகொலை மன அமைதியை இழக்க செய்திருக்கிறது. குற்றம் செய்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள். ஆனால், நிறைய நபர்கள் அப்பாக்களாக, தாத்தாக்களாக, மாமன்களாக, சித்தப்பாக்களாக இருக்கின்றார்கள்.

அவர்கள் யாரையும் இன்னும் மாட்டவில்லை. மாட்டிக்கொண்ட பசங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த சமூகம் இங்குள்ள அரசியல் இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள் தான் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதை எப்படி தடுக்க முடியும் என்று பெரிய ஒழுங்குமுறை பயிற்சிக்குள்ளாக நாம் போக வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இயக்குனர் பா ரஞ்சித்தின் பதிவுதான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது

Advertisement