விஜய்க்கு மட்டும் என்ன தனி சட்டமா..? விஜய் 62 படப்பிடிப்புக்கு வந்த சோதனை !

0
752
Vijay 62

நடிகர் விஷால் தமிழ் சினிமா சங்கத்தலைவரான பிறகு என்னேற்ற பிரச்சனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பந்த் ஒன்றை அறிவித்தது அதில் இனிமேல் புதிய படம் எதுவும் வெளியிட கூடாது என்றும் 16ஆம் தேதி முதல் எந்த ஒரு படப்பிடிப்பும் நடத்த கூடாது என்றும் அறிவித்தனர்.

J.Sathish Kumar

இந்த பந்திற்கு நடிகர்களும், இயக்குனர்களும் ஆதருவு தெரிவித்தனர். இந்நிலையில் பல படங்களில் படப்பிடிப்புகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் நடித்துவரும் அவரது படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா அரங்கில் நடந்துள்ளது.இதற்கு மதயானை கூட்டம், ரம்மி போன்ற படங்களை தயாரித்த ஜே. எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜே. சதீஷ் குமார் ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த சதீஷ் குமார் விஜய் படத்தின் படப்பிடிப்புகள் எப்படி விக்டோரியா மாளிகையில் நடந்து வருகிறது.எங்கே போனது ஒற்றுமை.எப்படி விஜய்க்கு மட்டும் சினிமா சபை சிறப்பு அனுமதி அளித்துள்ளது?இதனை நான் மிகவும் கடுமையாக கண்டிக்கிறேன் என்று மிகவும் கோவமா பதிவிட்டுள்ளார்.இதனால் விஜயின் படப்பிடிப்புகள் விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது .எப்போதும் விஜய் படம் வந்த பின்னர்தான் பிரேச்சனை வரும் ஆனால் தற்போது படப்பிடிப்பின் போதே பிரச்சனை வந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.