இயக்குனர் மஹிந்தரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜானி ” படம் ரஜினி வாழ்வில் ஒரு மறக்க முடியாத படம் என்று கூறலாம். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
இந்த படத்தில் வந்த அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வந்த “ஆசைய காத்துல தூது விட்டு” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் நடனமாடிய நடிகையின் பெயர் ‘சுபாஷினி’
1958 பிறந்தவர் நடிகை சுபாஷினி, இவரது தங்கை ஜெயசுதாவும் ஒரு நடிகை தான். நடிகை சுபாஷினி 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சிவரஞ்சனி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் ரஜினி மற்றும் கமல் நடித்த ‘நினைத்தலே இனிக்கும்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ‘ஜானி’ படத்திற்கு பின்னர் பிரபலமான இவர், அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் திடீரென்று 1983 ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமாவில் இருந்து 20 ஆண்டுகள் விலகியே இருந்தார்.
2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் பாரத்திற்கு அம்மாவாக நடித்து மீண்டும் சினிமாவில் நடிக்கதுவங்கினார். 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் ஒரு படத்தில் நடித்ததற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சில ஆண்டுககளுக்கு பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் இவர் மிகுந்த பண நெருக்கடியில் சிக்கினார். தான் சம்பாதித்த பணத்தை உறவினர்கள் ஏமாற்றியதால், நோய்க்கு சிகிச்சை பெறவும் பணமில்லாமல் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறார் என்பது சற்று வேதனை அளிக்கிறது.