விளையாட்டால் விபரீதம்..! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைக்கு விபத்து.! புகைப்படம் உள்ளே.!

0
716
Jacqueline-Fernandez

பாலிவுட் சினிமாவில் “கிக்,ரேஸ்,மர்டர் -2” போன்ற படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்தி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இவரது கண்களில் நிரந்தர வடு ஏற்பட்டுள்ளது.

இந்தி நடிகையான இவர்,சமீபத்தில் சல்மான் கான், அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்த ‘ரேஸ் 3’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இம்மாதம்(ஜூன் 15) வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள அபுதாபியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. இதில் படத்தில் வரும் பல்வேறு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது, அதில் ஜாக்குலின் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகலும் படமாக்கபட்டு வந்தது.

கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜாக்குலின் ஸ்குவாஷ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டு கண்களிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் தற்போது அந்த காயம் ஜாக்குலின் கண்களில் நிரந்தரமான வடுவை தனது கண் விழியில் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஜாக்குலின், தனது கண்ணை புகைப்படம் எடுத்து ‘தனது கண்ணின் கருவிழியில் நிரந்தர காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பார்வை கோளாறு ஏற்படவில்லை ‘ என்று பதிவிட்டுள்ளார்.