நடிகர் ஜான் விஜய் செய்தது உண்மையா? டிவியில் இருந்து விலக போகிறாரா ஜாக்குலின் ?

0
4390
- Advertisement -

விஜய் டீவியில் கல்லக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் ஜாக்குலின். இவர் தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் விஜய் டீவியை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த ஜான் விஜய், ஜாக்குலினுடன் நடனமாடினார், அப்போது ஜான் விஜய் தொட்டு தொட்டு ஆடியதாகவும் உடனடியாக ஜாக்குலின் தொடாமல் ஆடுங்கள் எனவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், காமெடி நடிகர் ஜெகன், ஜாக்குலினை டபுள் மீனிங்கில் கலாய்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன ஜாக்குலின் விஜய் டீவியை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் ஜாக்குலின் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவுடன் ஒரு படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார். மேலும் சில பட வாய்ப்புகள் ஜாக்குலினுக்கு வந்துள்ளதாகவும் அதில் நடிக்கவே விஜய் டீவியை கைவிட்டதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது.

Advertisement