பிக் பாஸுக்கே விபூதி அடித்த ஜாக்குலின், சிக்க வைத்த பவித்ரா- இதோ வீடியோ

0
149
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்லின் செய்திருக்கும் தில்லாலங்கடி வேலை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 83 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார்.

பிரீஸ் டாஸ்க்:

இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருகிறார்கள். தொடர்ந்து அடுத்தடுத்து போட்டியாளர்களுடைய பெற்றோர்கள் வந்திருந்தார்கள். நேற்று எபிசோட்டில் விஷ்ணுக்கு சௌந்தர்யா ப்ரோபோஸ் செய்ததும், அருண் தன் காதலி அர்ச்சனாவை அறிமுகம் செய்து வைத்ததும் சூப்பராக இருந்தது. அதோடு வீட்டிற்குள் வந்தவர்களிடம் நைசாக வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் ஜாக்குலின் செய்திருக்கும் தில்லாலங்கடி வேலை தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ஜாக்லின்:

அதாவது, ஜாக்லின் குடும்பத்திலிருந்து அவருடைய அம்மாவும், அவருடைய நண்பர் மற்றும் தோழி வந்திருந்தார்கள். ஜாக்குலின் தோழியாக வந்தவர் தான் அவருக்கு டிசைனர் ஆகவும் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஜாக்லின் போடும் அனைத்து உடைகளையும் அவர் தான் அனுப்பி வைப்பாராம். அந்த ஆடையை ஒரு code word ஆக இத்தனை நாட்கள் ஜாக்லின் பயன்படுத்தி விளையாடியிருக்கிறார் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. வெளியில் ஒவ்வொரு வாரமும் ஜாக்லின் இமேஜ் எப்படி இருக்கிறது? என்பதை இந்த ஆடை மூலம் தெரிந்து கொள்வாராம்.

ஜாக்லின் செய்த வேலை:

பச்சை நிறத்தில் வந்தால் நன்றாக விளையாடுகிறார், சிவப்பு நிறத்தில் வந்தால் டேஞ்சர் ஜோன் என்று ஒவ்வொரு நிறத்திற்கும் code wordயை நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் சொல்லி வைத்து வந்திருக்கிறார் ஜாக்லின். இதை ஜாக்லின் டிசைனர் நிகழ்ச்சி உள்ளே வந்தவுடன் வாய் தவறி உளறி விட்டார். இதை அறிந்த பவித்ரா, மற்ற போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸுக்கு ஜாக்லின் விபூதி அடித்து விட்டாரே! என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement