அது எப்படி திமிங்கலம் கார் மேல வந்துச்சி – நெட்டிசன்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த தனுஷ் ரசிகர்கள்.

0
1924
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 18 ஆம் தேதி Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார். அவரை லண்டன் கேங்ஸ்டர் கும்பல், மதுரை தமிழரான தனுஷை வைத்து கொள்கின்றனர்.

- Advertisement -

பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார். பின்னர் தனுஷ் என்ன ஆனார், புலம்பெயர் தொழிலார்களுக்கு என்ன ஆனது என்பது தான் கதை. தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் சேர்த்து இந்த படத்தில் காண்பித்து உள்ளார்.

இந்த படத்தை ஏற்கனவே நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் தனுஷ்ஷின் இன்ட்ரோவில் ரயில் பாதைக்கு மேல் காரை நிறுத்தி ரயிலையே மடக்குவார் தனுஷ். இந்த காட்சியில் ரயில் பாதையில் இருக்கும் பாலத்திற்கு மேல் எப்படி கார் போனது என்று பலர் கேலி செய்ய, ஷூடிங் ஸ்பாட்டில் அந்த காரை எப்படி அங்கு நிறுத்தினார்கள் என்று புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement