ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வந்துறுச்சசேனு சந்தோசபடறதா, இல்ல OTT-ல ரிலீஸ்னு வருத்தப்படறதா – குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்.

0
2223
dhanush

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் என்ற பெயருடன் திகழ்ந்து வரும் தனுஷ்ஷின் ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தணுஷ், ஹாலிவுட்டில் கிரே மேன், தமிழில் கர்ணன், கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வாகிரகவானுடன் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′, இந்தியில் ஒரு படம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்து கடந்த ஆண்டு மே 1-ம் தேதியே ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்ட இப்படம் கொரோனா லாக்டெளன் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது. தமிழில் பீட்சா ஜிகர்தண்டா, பேட்ட போன்ற வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.  தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

இதையும் பாருங்க : அடியே ரத்தி அக்கினி ஹோத்திரி – மான் கராத்தே பட நடிகையா இது – எஸ் கே சொன்னது போல நல்லா டின் பீர் மாதிரி தான் இருக்காங்க.

- Advertisement -

பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் என முதலில் முடிவெடுத்து தயாரிப்புத் தரப்பு தனுஷுக்கு தகவல் சொன்னது. ஆனால், இடையில் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக நெட்ஃபிளிக்ஸில் பேச்சுவார்த்தைகள் நடக்க அதிருப்பதியானார் நடிகர் தனுஷ். மேலும், `தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறேன்” என நடிகர் தனுஷ் ட்வீட்போட இந்த படத்தில் திரையரங்கில் வெளியிட பல்வேறு முயற்சிகள் நடந்தது.

ஆனால், இந்த படம் OTT யில் தான் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரும் விலை கொடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் ஒரே சமயத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் டீஸரும் வெளியாகியுள்ளது. டீஸர் வெளியிட்டால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் ஓடிடி வெளியீட்டால் கொஞ்சம் சோகமாகியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement