தமிழ் சினிமா உலகில் பிரபலமான சண்டை பயிற்சியாளராக இருப்பவர் ஜாக்குவார் தங்கம். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் சென்னை எம்ஜிஆர் நகர், அண்ணல் காந்தி தெருவில் தான் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஜாக்குவார் தங்கம் மனைவி சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் ஜாக்குவார் தங்கம் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், என்னுடைய கணவர் ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது கொண்ட பெண் ஒருவருடன் பழக்கம் இருக்கிறது. கடந்த 15 ஆம் தேதி அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். என்னையும் என் மகன்களையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விட்டார். இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சாந்தியிடம் முதலில் விசாரித்து இருக்கிறது.
ஜாக்குவார் தங்கம் மீது புகார்:
இதை அடுத்து போலீசார் ஜாக்குவார் தங்கம் மற்றும் அவர்களின் மகன்கள், அந்த இளம் பெண் மீது விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறது. இப்படி பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவருடைய மனைவி கொடுத்திருந்த குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜாக்குவார் தங்கம், என்னுடைய மனைவி, மகன்கள் என் மீது புகார் கொடுத்தது உண்மை தான். எனக்கு சொந்தமாக ஏழெட்டு வீடுகள் இருக்கிறது.
ஜாக்குவார் தங்கம் பேட்டி:
எனக்கு மனநிலை சரியில்லை என்று என்னுடைய மகன்கள், என் மனைவி, மனைவியின் தம்பி அதாவது என் மச்சான் நான்கு பேரும் சேர்ந்து எனக்கே தெரியாமல் 15 லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு வீடுகளை விட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் நான் பேட்டி கொடுத்ததை பார்த்து என்னிடம் விசாரித்த போது தான் எனக்கு இந்த உண்மை தெரிந்தது. இது குறித்து கேட்டபோது அவர்கள் மழுப்பினார்கள். அதற்கு பிறகு தான் என்னுடைய வீட்டை மீட்டேன். ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கேட்டாள் அமைதியாக இருக்கிறார்கள். என்னுடைய இரண்டு மகன்களுக்கும் 35, 40 வயது ஆகிறது. இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும், எந்த வேலைக்குமே செல்லவில்லை.
மனைவி குறித்து சொன்னது:
வீட்டில் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதை நான் கேட்டால் எதிர்த்து பேசுகிறார்கள். இதனால் நான், இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால் வேலைக்கு செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும் இல்லை என்றால் வெளியே போ என்று சொன்னேன். அதற்கு அவர்கள் என் மச்சானின் பேச்சை கேட்டு போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். போலீஸ் வந்து என்னிடம் விவரத்தை சொன்ன போதுதான் எனக்கே தெரிந்தது. அப்போது நான் அவர்களிடம் நடந்த விபரத்தை எடுத்து சொன்னேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய மனைவிக்கு 36 பவுனில் தாலி செயின் போட்டிருந்தேன்.
புகார் குறித்து சொன்னது:
என் மனைவியின் பெயரில் 7 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்தேன். இரண்டுமே அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. இதைக் கேட்டாலும் முழுதாக பதில் சொல்லவில்லை. இதோடு என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு சட்ட ஆலோசகராக இருக்கும் பெண்ணை என்னுடன் இணைத்து வைத்து பேசுகிறார்கள். அவர் எனக்கு மகள் மாதிரி. அவர் இவர்கள் செய்யும் தப்பை சுட்டி காண்பித்தார். இதனால் அவருக்கு பல தொந்தரவு கொடுத்தார்கள். அதனால் தான் என் வீட்டிற்கு கீழ் குடி வைத்தேன். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 65 வயதிலேயே செக்ஸை துறந்து விட்டேன். காரணம் நான் 200 வயது வரை வாழ வேண்டும். அப்படி வாழ வேண்டும் என்றால் விந்தனுக்கள் வெளியேறக்கூடாது. இது ஒரு சித்தர் சொன்னது என்று கூறியிருக்கிறார்