சைத்ராவும் நட்சத்திராவும் அப்படி சொன்னது ரொம்பவே காயப்படுத்திடுச்சு’ – ஜெய் ஆகாஷ்

0
66
- Advertisement -

கடந்த சில வாரமாகவே நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த சீரியல் தான் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ இந்த சீரியல் ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியலின் ரீமேக். இந்த சீரியலில் கதாநாயகியாக ரேஷ்மா நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த சீரியல் தொடங்கி ஆறு மாதம் கூட ஆகாத நிலையில் திடீரென இந்த சீரியலை சமீபத்தில் முடித்திருந்தாரர்கள்.

-விளம்பரம்-

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சீரியல் குழுவினருக்குமே பேரதிர்ச்சி தான். இது தொடர்பாக சீரியல் ஹீரோ ஆகாஷ் பதிவு ஒன்று போட்டுஇருந்தார். அதில் அவர், தனக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதன் காரணமாகத்தான் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இதனால் தான் சீரியல் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி இருந்தார். ஆனால், ஒரு சிலர் இந்த சீரியல் முடிவடைவதற்கு கதாநாயகி ரேஷ்மா தான் காரணம் என்று கமெண்ட்களில் பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து நடிகை ரேஷ்மா, ஜெய் ஆகாஷின் ரசிகர்களுக்காக ஒரு பதிவை போட்டு இருந்தார்.

- Advertisement -

ரேஷ்மா பதிவு:

அதில், உண்மை என்ன என்று தெரியாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அதேபோல் யாரையும் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்யாதீர்கள். மேலும், நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததற்கு நானோ அல்லது என்னுடைய டீமோ காரணம் கிடையாது. என்னுடைய பேன் பேஜ்களை ரிப்போர்ட் செய்வதன் மூலமாகவோ, அட்டாக் பேஜ்களை மூலமாகவோ உண்மையை மறைக்க முடியாது. எனது ரசிகர்கள் அன்போடும் மரியாதையோடும் எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள். அதனால் அவர்களை யாராவது தாக்கி பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்கள் ஹீரோவை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால், தொழில் முறையை ஊக்குவிக்கவும், நச்சுத்தன்மையை அல்ல என்று பதிவிட்டு இருந்தார்.

ஜெய் ஆகாஷ் பேட்டி:

இதை அடுத்து ரேஷ்மா, ஜெய் ஆகாஷ் ரசிகர்கள் இடையே சண்டை தான் நடந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெய் ஆகாஷ் அளித்த பேட்டியில், இந்த சீரியலின் கதைப்படி ஹீரோ ஹீரோயினை விட அதிக வயது கொண்டவராக இருக்க வேண்டும். அந்த தோற்றத்திற்காக நான் நிறைய மெனக்கெட்டேன். வாக்கிங், உடற்பயிற்சிகள் என எல்லாத்தையுமே நிறுத்திவிட்டேன். ரொம்ப டெடிகேட்டிவ்வாகத் தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக இடையில் ஒரு விபத்து நடந்தது. அதனால் எனக்கு காலில் பெரிய அடி ஏற்பட்டது. இருந்துமே நான் சீரியல் ஒளிபரப்பாகுது, அதை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது என்பதால் வலியை பொறுத்துக் கொண்டு நடித்துக் கொண்டு வந்தேன்.

-விளம்பரம்-

சீரியல் முடிய காரணம்:

ஒரு கட்டத்தில் நான் படும் கஷ்டத்தை பார்த்த என் வீட்டில் நான் நடிப்பதை ஒத்து கொள்ளவில்லை. அதற்கு பின் ஹாஸ்பிடலில் என்னுடைய நிலைமையின் விபரீதம் தெரிந்தது. உடனடியாக ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் நான் என்னுடைய தயாரிப்பு தரப்பில் இந்த விஷயத்தை சொல்லி நடிக்க வர முடியாது. நீங்கள் வேறு ஒரு ஆர்டிஸ்ட்டை கமிட் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவர்களுமே என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டார்கள். இதற்கிடையில் நான் நடிக்க வராமல் இருந்த நாட்களில் சீரியல் டிஆர்பி குறைந்துவிட்டது என்று சேனல் தரப்பில் இருந்து தயாரிப்பு தரப்பிற்கு சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் என் கதாபாத்திரத்துக்கு புது ஆர்ட்டிஸ்ட் கொண்டுவருவதில் தயாரிப்பு மற்றும் சேனல் தரப்பு கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது.

ரேஷ்மா நண்பர்கள் சொன்னது:

அதற்கு மேல என்ன நடந்தது என்று தெரியவில்லை. திடீரென சீரியல் முடிந்ததாக தகவல் வந்தது. இதில் என் மீது என்ன தப்பு? உண்மையில் இதுதான் நடந்தது. சீரியல் முடிவுக்கு வந்ததுமே என்னுடைய ரசிகர்களுக்கு தெரிவிக்கணும் என்று நான் போஸ்ட் போட்டேன். அதில் சிலர், நீங்கள் இல்லாததால் தான் சீரியலை முடித்து விட்டார்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள். அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட ரேஷ்மா ரசிகர்கள் என்னையும், என் ரசிகர்களையும் திட்டி இருந்தார்கள். அதை புரிந்து கொள்ளாமல் ரேஷ்மா, என்னையும் என்னுடைய ரசிகர்களையும் விமர்சித்து பதிவு போட்டிருந்தது எனக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரேஷ்மாவுக்கு ஆதரவாக அவருடைய நண்பர்கள் சைத்ரா, நட்சத்திரா ரெண்டு பேருமே, நான் சொன்னதெல்லாம் பொய் என்பது போல் உருட்டு என்று போட்டிருந்தார்கள். அந்த வார்த்தை என்னை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. எல்லோருமே ஃபீல்டில் இருக்கிறவர்கள். நாளைக்கு ஒருத்தரை ஒருத்தர் சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ண வேண்டிய நிலை வரும். அப்ப எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தில் முழிப்பது சொல்லுங்க என்று ரொம்ப பேசி இருக்கிறார்.

Advertisement