தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகர் ஜெய் ஆகாஷ் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்துவிட்டார்.

அந்த வகையில் இவர் முதன் முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி அடைந்த நீதானே 'என் பொன்வசந்தம்' என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இது மராட்டிய மொழியில் வெளியாகி இருந்த 'துலா பஹட் ரே' என்ற சீரியலின் ரீமேக். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 20 வயதான இளம் பெண் அனுவுக்கும், 40 வயதை கடந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ்க்கும் இடையே நடக்கும் காதல் கதை . இந்த சீரியலும் நன்றாக தான் சென்றிருந்தது. பின் திடீரென முடித்து விட்டார்கள். அதற்குப்பின் இவர் தெலுங்கு சீரியலிலும் நடித்திருந்தார்.
ஜெய் ஆகாஷ் குறித்த தகவல்:
சிறிய இடைவெளிக்கு பின் இவர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல் ஜெய் ஆகாஷ் நீண்ட இடைவெளிக்கு பின் எழுதி இயக்கி நடித்த படம் 'ஜெய் விஜயம்'. இந்த படத்தில் அகஷய கண்டமுதன், அட்சய ராய், மைக்கேல் ஆகஸ்டின் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. இதை அடுத்து இவர் மீண்டும் சீரியலுக்கே வந்து விட்டார். இதற்கிடையில் ஆகாஷுக்கும் பிரபல நடிகரின் மனைவிக்கும் இடையே காதல் இருந்ததாக இணையத்தில் செய்தி பரவி இருந்தது.
Jai Akash about his ex lover. What a Sad story. 🥲pic.twitter.com/BHnMLvOWtb
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 8, 2024
ஜெய் ஆகாஷ் பேட்டி:
மேலும், பட விழா ஒன்றில் ஜெய் ஆகாஷ் ‘நான் ஒரு பெண்ணை காதலித்தது உண்மைதான். அந்த பெண் பணத்திற்காக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். என்னுடைய காதலி நல்லவள் என்பதால் இந்த கதையில் நான் பாசிட்டிவாக கொடுத்து இருக்கிறேன். என்னுடைய காதலும் உண்மை, நான் காதலித்த பெண்ணும் உண்மை' என்று கூறியிருந்தார். இப்படி ஜெய் ஆகாஷ் பேசி இருந்த பெண் விஜய் மனைவி சங்கீதா தான் என்று பலரும் கூறி இருந்தார்கள்.
பயில்வான் சொன்ன சர்ச்சை:
அதற்கு ஏற்கனவே ப்ரோமோஷன் விழாவில் பயில்வான் ரங்கநாதன், ஜெய் ஆகாஷ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றி ஒரு கிசுகிசு வெளியிட்டேன். இவரும் இன்னொரு பெண்ணும் காதலில் இருந்து வந்திருந்தார்கள். அந்த பெண் பிரபல நடிகை தான். நான் சொன்ன கிசுகிசு உண்மைதான் என்று சொல்ல ஜெய் ஆகாஷ், உடனடியாகவே பயில்வான் பக்கம் வந்து இது பொய்யான தகவல் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
ஜெய் ஆகாஷ் கொடுத்த விளக்கம்:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெய் ஆகாஷ், அந்த பிரபலத்திற்கு வேண்டாதவர்கள் யாரோ செய்த வேலை என்று தான் நினைக்கிறேன். என்னால் ஒரு குடும்பம் கெட்டுப் போய் விடக்கூடாது, நம்மால் யாருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் நினைத்தேன். 'ரோஜா கூட்டம்' படம் ஹிட் அடித்த உடனே எனக்கு நிறைய படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த சமயத்தில் இந்த மாதிரி தேவையில்லாத சர்ச்சைகள் வந்ததால் தான் அதை முடித்துவிட்டு நடிக்கலாம் என்று இருந்தேன். மற்றபடி இந்த சர்ச்சைகள் எதுவும் உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார்.






