எனக்கு 18 வயசு ஆகும் போது என் முதல் ஒட்டு உங்களுக்கு தான் அங்கிள் – ஜெய் பீம் அல்லி வெளியிட்ட வீடியோ.

0
333
joshika
- Advertisement -

என்னுடைய முதல் ஓட்டே உங்களுக்கு தான் அங்கிள் என்று ஜெய் பீம் படத்தில் அல்லியாக நடித்த சிறுமி அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் இந்த படத்தில் ராஜகண்ணு– செங்கேணி மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுமி நடித்திருந்தார்.

- Advertisement -

ஜெய்பீம் பட சிறுமி:

அவரின் நிஜ பெயர் ஜோஷிகா மாயா. ஜெய் பீம் படத்தில் சூர்யா கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அதை பார்த்து சிறுமி அதே போல் கால் மேல் கால் போட்டு போல் படிப்பார். அந்த காட்சியின் மூலம் அந்த சிறுமி பிரபலமானார் என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தில் சிறுமி நடித்ததற்காக பள்ளி நிர்வாகம் சிறுமிக்கு டிசி கொடுத்து விட்டதாக சொல்லி சோஷியல் மீடியாவில் பல்வேறு செய்திகள் எழுந்து இருந்தது. இந்த தகவல் எல்லாமே பொய்.

சிறுமி அளித்த பேட்டி:

இதெல்லாம் உண்மை கிடையாது என்று சிறுமியின் பெற்றோர்கள் விளக்கம் கொடுத்து இருந்தார்கள். தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு கேட்டு வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஜெய்பீம் படத்தில் அல்லி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி ஜோஷிகா மாயா முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய முதல் ஓட்டே உங்களுக்கு தான் அங்கிள். நான் 18 வயதில் ஓட்டு போடும் போது நீங்கள் தான் முதலமைச்சராக இருப்பீர்கள். உங்களுக்கு தான் என்னுடைய முதல் ஓட்டு போடுவேன் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

முதலமைச்சர் ஸ்டாலின் :

இப்படி சிறுமி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் முதன் முறையாகத் தற்போது தான் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். இதற்கு முன் இவர் தமிழகத்தின் துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி பொறுப்பு வகித்திருந்தார்.

ஸ்டாலின் வகித்த பதவிகள்:

அதுமட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சியின் மேயராகவும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருந்து இருக்கிறார். ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கோரியும், அன்பு மழை பொழிந்தும் வருகிறார்கள்.

Advertisement