ஜெய் பீம் செங்கேணி வசனத்தை பேசி அசத்திய ராசாகண்ணு மகள் – வைரலாகும் வீடியோ

0
281
alli
- Advertisement -

அனைத்து சோசியல் மீடியாவிலும் பேசும் பொருளாக ஜெய் பீம் படம் அமைந்து உள்ளது. சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது . இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-

மேலும், பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் பார்த்து பல பிரபலங்கள் இந்த படம் குறித்து சோசியல் மீடியாவில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

இதனிடையே இந்த படத்தில் இந்த படத்தில் ராஜகண்ணு– செங்கேணி மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுமி நடித்திருந்தார். அதோடு ஜெய் பீம் படத்தில் சூர்யா கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அதை பார்த்து சிறுமி அதே போல் கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அந்த காட்சியின் மூலம் அந்த சிறுமி பிரபலமானார் என்றே சொல்லலாம்.

ஜெய் பீம் படத்தில் நடித்ததால் இவருக்கு பள்ளி நிர்வாகம் tc கொடுத்துவிட்டதாக கூட சர்ச்சைகள் எழுந்தது ஆனால், அது உண்மை இல்லை என்று சிறுமியின் தந்தை கூறி இருந்தார். மேலும், இந்த சிறுமி டிக் டாக் வீடியோக்கள் மூலம் தான் பிரபலமானார். இந்த நிலையில் ஜெய் பீம் படத்தில் செங்கேணி கதாபத்திரத்தின் எமோஷனல் வசனத்தை பேசி அசத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement