படத்தில் வன்னியரை இழிவுபடுத்துவதுமான மாதிரி காட்சி எதுவும் இல்லை – போராடியவரே சொல்லிட்டாரு அப்புறம் என்ன.

0
934
jaibhim
- Advertisement -

சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே ஜெய் பீம் படத்தின் சர்ச்சைகள் தான் போய் கொண்டு இருக்கிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வன்னியர் சமூகத்தினர் சூர்யாவை குறித்தும் இயக்குனர் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தாலும் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது.

-விளம்பரம்-

அந்தவகையில் பழங்குடியின மக்களுக்காக போராடிய கோவிந்தனும் ஒரு வன்னியர் தான் என்று ஒரு சிலர் சோசியல் மீடியாவில் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பார்வதி ராஜகண்ணுக்காக போராடியவர்களில் கோவிந்தனும் ஒருவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் கோவிந்தன் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ராஜகண்ணு, பார்வதிக்காக போராடியது உண்மை தான். படத்தில் பழங்குடியின மக்கள் பட்ட கஷ்டங்களையும், அவர்கள் போராடியது குறித்தும் அழகாக சொல்லி இருந்தார்கள்.

- Advertisement -

யாருக்கும் தெரியாத விஷயத்தை இந்த படத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இதை ஒரு சில பேர் சாதிப் பிரச்சனையாக மாற்றி வருகிறார்கள். படத்தில் வன்னியரை இழிவுபடுத்துவதுமான மாதிரி காட்சி எதுவும் இல்லை. எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை. நான் வன்னியர் என்று சொல்வது தவறான விஷயம். நான் வன்னியரும் இல்லை. எந்த ஜாதியும் இல்லை. நான் ஒரு பொதுவானவன். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சேர்ந்தவன். அதன் மூலமாகத்தான் நான் பார்வதி, ராஜ கண்ணுக்கு உதவினோம்.

அதில் கோவிந்தன் உதவினான் என்பது சொல்வதைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவியது சொல்வது தான் பொருந்தும். ஏன் என்றால், அந்த இடத்தில் நான் இல்லை என்றாலும் என்னைப் போல் இருக்கும் பல பேர் உதவி இருப்பார்கள். நான் பொதுவுடமை தான் செய்தோம். அது மட்டுமில்லாமல் பல தொழிலாளர்களுக்கும் நாங்கள் உதவி செய்திருக்கிறோம். ஆனால், அதை இப்போது ஜாதிக் கலவரமாக மாற்றுவது மிக தவறான செயல். நம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை போய்க்கொண்டிருக்கின்றது அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இப்படி பண்ணுவது சரி இல்லை. தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்சினையை இந்த அளவிற்கு போராடினால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

-விளம்பரம்-

மேலும், 5 கோடி ரூபாய் பணத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது சினிமா துறையை சேர்ந்தவர்களும், வன்னியர் கட்சி ஆகியோர் இடையே பேசிக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் பொதுவுடமை ஆகிய நான் தலையிடுவது சரியில்லை. நான் சொல்ல வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நான் பொதுவுடமை ஆனவன், மக்களுக்காக குரல் கொடுப்பவன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement