நாம் இருவர் நமக்கு இருவர் ஜனனிக்கு இப்படி ஒரு தங்கை இருக்காரா ? வைரலாகும் புகைப்படம்.

0
1050
janani
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடித்தனர்.

-விளம்பரம்-

செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது. ஆனால், இந்த சீரியலில் இருந்து கார்த்தி விலகிவிட்டார். மேலும், இத்தொடரில் ‘அகிலாண்டேஸ்வரி’ கதாபாத்திரத்துக்கென ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அகிலாண்டேஸ்வரியின் 2-வது மருமகளாக நடித்திருந்தவர் ஜனனி அசோக் குமார்.

இதையும் பாருங்க : படத்தில் வன்னியரை இழிவுபடுத்துவதுமான மாதிரி காட்சி எதுவும் இல்லை – போராடியவரே சொல்லிட்டாரு அப்புறம் என்ன.

- Advertisement -

இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த தொடரில் நடிகை ஜனனி, ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தனது யூடுயூப் சேனலில் ரசிகர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடீரென்று இவருக்கு செம்பருத்தி சீரியலில் இருந்து அழைப்பு வந்தது.

அதில் செம்பருத்தி சீரியலில் இருந்து தான் நீக்கப்பட்டதாக கூறியதாக கண்ணீர் மல்க கூறி இருந்தார் ஜனனி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். இந்த நடிகை ஜனனி அசோக் தனது தங்கையுடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-


Advertisement