ஒருபக்கம் வன்னியர்களின் எதிர்ப்பு, மறுபக்கம் சூர்யாவிற்கு குவியும் ஆதரவு. ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக்.

0
766
ranjith
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது. இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது.

-விளம்பரம்-

இதனால் அந்த காட்சியில் இடம்பெற்ற அக்னி குண்டம் படத்திற்க்கு மாறாக லட்சுமி தேவி புகைப்படத்தை வைத்து மாற்றம் செய்தனர் படக்குழு. இருப்பினும் இந்த படத்தில் கொடூரமான போலீசாக வரும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரமும் காடுவெட்டி குருவை குறிப்பிடுவதாகவும். உண்மையில் ராஜா கண்ணு வழக்கில் பேருதவியை இருந்த வன்னியரை இந்த படத்தில் காட்டவிலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

- Advertisement -

இதை தொடர்ந்து பல்வேரு வன்னிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட மயிலாடுதுறை பா ம க உறுப்பினர் சித்தமல்லி பழனிச்சாமி தன் கூட்டத்துடன் சேர்ந்து மயிலாடுதுறையில் உள்ள காவல் நிலையத்தில் ஜெய் பீம் பட தயாரிப்பாளர், இயக்குனர்,சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்கள். மேலும், சூர்யாவை அடித்தால் 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, வன்னியர்கள் சங்கத்தை தவறாக சித்தரித்ததற்காகவும், இழிவுப்படுத்தியதற்காகவும் பத்திரிக்கை, ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைவர் மீதும் சட்டப்படி வழக்கு தொடரப்படும். அதோடு படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளையும் நீக்க வேண்டும். ஒருவார காலத்திற்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்மொழி சார்பில் நடிகர் சூர்யா, ஜோதிகா(தயாரிப்பு), இயக்குனர் ஞானவேல், அமேசான்(ஓடிடி) உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இப்படி சூர்யாவா மற்றும் ஜெய் பீம் படக்குழுவிற்கு தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்தாலும். ஒருபுறம் இவர்களுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. மேலும், ட்விட்டரில் Westandwithsuriya என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ் டேக்கை பதிவிட்டு சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்டு சூர்யாவிற்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

ஜெய் பீம் படத்தின் தலைப்பை பா ரஞ்சித் தான் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு அந்த படம் குறித்து பதிவிட்ட ரஞ்சித் ‘ “சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே – இதோ மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதைபோல இனி பல கதைகள் வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ‘ஜெய் பீம்’ படத்தைக் கொடுத்த படக்குழுவிற்கு பெரும் நன்றிகள் ‘ என்று பாராட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement