ஜெய் பீம் படத்தை கண்டித்தும், சூர்யாவை எச்சரித்தும் அன்புமணி கேட்ட கேள்விகள் – சூர்யா கொடுத்துள்ள பதில் அறிக்கை.

0
574
surya
- Advertisement -

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ‘ஜெய் பீம் ‘ திரைப்படம், அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சில காட்சிகள் அமைக்கப்பட்டதாக பல வன்னிய சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த படத்தின் ஒரு காட்சியில் காலண்டரில் காட்சிப்படுத்தப்பட்ட அக்னி குண்டம் கூட படத்தில் கடவுளின் படம் இருப்பது போல மாற்றப்பட்டது.

-விளம்பரம்-

இருப்பினும் இந்த படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக காட்டப்பட்ட கதாபாத்திருக்கு ‘குருமூர்த்தி’ என்று பெயர் வைக்கப்பட்டதற்க்கும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை கண்டித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

இதில் இந்த படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த அன்புமணி, சூர்யாவிற்கு 9 கேள்விகளை முன் வைத்தார். இப்படி ஒரு நிலையில் அன்புமணியின் கண்டனத்திற்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக சூர்யா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.

அதில், என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே ‘ஜெய் பீம்’ படத்தின் மையக்கரு. கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ சமுதாயத்தையயோஅவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ படக்குழுவினருக்கும் இல்லை. சிலர் சுட்டிக் காட்டிய பிழையும் உடனடியாக திருத்தி சரி செய்யப்பட்டதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

-விளம்பரம்-

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட .பெயர் அரசியலுக்குள். சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சகமனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமுமோ தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சமத்துவமும் சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் தங்கள் புரிதலுக்கு நன்றி

Advertisement