இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வன்னியர் சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வன்னியர் சமூகத்தினர் சூர்யாவை குறித்தும் இயக்குனர் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணமான அன்புமணி ராமதாஸ் மீது விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாக இருக்கிறது. அதில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கூறியிருப்பது,
ஜெய் பீம் படம் ஜாதி, மத பேதங்களை கடந்து எல்லா மதத் தரப்பு மக்களிடம் ஆதரவு பெற்ற படம். படத்தில் இருளர், குறவர் சமுதாய மக்களின் பிரச்சனையை பெரிய அளவில் மக்கள் மற்றும் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதனால் நல்ல விளைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், வேண்டும் என்றே பிரச்சனையை ஏற்படுத்து வதற்காக கடந்த 10ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யா அவர்களுக்கு 9 கேள்விகளுடன் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்.
மேலும்,அந்த கடிதத்தின் இறுதியில் என்னுடைய தொண்டர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். உங்களுடைய படங்கள் வெளியாகும் சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று எச்சரிக்கை தோணியில் வெளியிட்டிருந்தார். இது எப்படி இருக்கு என்றால், பிரச்சனையே இல்லாத இடத்தில் வலுக்கட்டாயமாக பிரச்சனையை கிளப்புகிறார். படத்தில் காலண்டரில் அக்னி கலசம் காண்பித்து விட்டார்கள் என்று வன்னியர் சமுதாயத்தை தூண்டி விட்டார். ஆனால், இதை யாருமே கவனிக்க வில்லை என்பது தான் உண்மை. இதெல்லாம் அவர் செய்ததற்கு காரணம், உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது .அதனை சமாளிப்பதற்காகவும், 10 சதவீத இளைஞர்கள் இட ஒதுக்கீட்டில் 8000 மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதையெல்லாம் மறைப்பதற்காக தான் அன்புமணி பிரச்சனையை திசை திருப்புகிறார். தமிழ் சமூகத்தை ஜாதிகளாக கூறு போடும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் இறங்கி இருப்பதாக தெரிகிறது. இது தமிழ் சமூகத்தில் தேவையில்லாத ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அதோடு அவருடைய கடிதத்திற்கு பிறகு கேலண்டர் இருந்து அந்த காட்சிகளை நீக்கி இருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகும் மிரட்டல் விடுப்பது, 5 கோடி பணம் நஷ்ட ஈடு வேண்டும் என்றும், காடுவெட்டி குரு அவர்களின் மகன், மருமகன் நடிகர் சூர்யா படங்கள் ரிலீசாகும் தினங்களில் தியேட்டர்களில் கொளித்துவிடுவோம் என்றும், சூர்யா சாலை மார்கமாக தமிழ்நாட்டில் போக முடியாது என்றும், அவரை எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் தருகிறோமென்றோம் பேசி இருக்கிறார்கள்.
இதெல்லாம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதத்திற்கு பின்னால் ஏற்பட்ட விளைவுகள். இதனால் இவர்கள் எல்லாம் வெறும் அம்புகள். எய்தவர் அன்புமணி ராமதாஸ் தான். அன்புமணி தேவையில்லாமல் இந்த பிரச்சனையை கிளப்பி விட்டு வன்னிய சமுதாயத்தின் இளைஞர்களை வன்முறையாளர் ஆக மாற்றக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுகிறார். அதை தடுத்து நிறுத்த வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடிய அன்புமணி ராமதாஸ் அவர்களின் மீது நாங்கள் சட்டப்படி அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் அளித்து இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.