‘ஜெய் பீம் படத்த செல்போன்ல காமிச்சாங்க, ஆனா நான் முழுசா பாக்கல, ஏன்னா ‘- உண்மையான செங்கேணி (பார்வதி) சொன்ன விஷயம்.

0
528
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரு சில சமூகத்தினர் சூர்யாவை குறித்தும் இயக்குனர் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தாலும் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க படத்தின் கதாநாயகியான நிஜ பார்வதியின் தற்போதை நிலை குறித்த தகவலும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
பார்வதி

மேலும், நிஜ பார்வதியின் நிலை குறித்து பல சேனல்களும், பத்திரிகைகளும் விசாரித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இதனிடையே சூர்யா அவர்கள் பார்வதி அம்மாவுக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து அவருக்கு பிறகு அதை அவர்களுடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நேரில் சென்று வழங்கியிருந்தார். இந்த நிலையில் ஜெய் பீம் படம் குறித்தும், சூர்யா குறித்தும் பார்வதி அம்மா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : சினிமாவிற்கு வருவற்கு முன் 7,8 பிஸ்னஸ்,150 பேருக்கு வேலை, மாதம் இத்தனை லட்சம் வருமானம் – பவர் ஸ்டாரின் மறுபக்கம்

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, நடிகர் சூர்யா அவர்கள் என்னை சந்தித்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஆனால், அவரிடம் நான் பெரிதாக ஏதும் பேசவில்லை. அவர் காசோலையை என் கையில் கொடுத்து வங்கியில் போட்டுக்கொள்ளுங்கள். இது உங்கள் காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இப்படி பல பேரோடா உதவி வந்து கொண்டிருக்கின்றது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி. ஜெய் பீம் படத்தை என்னுடைய பேரப்பிள்ளைகள் தொலைபேசியில் போட்டுக் காண்பித்தார்கள். ஆனால், என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை.

மனம் வெறுத்து விட்டது. உயிரே போய் விட்டது இனிமேல் படம் பார்த்து என்ன செய்யப் போகிறேன். செய்யாத குற்றத்திற்கு திருட்டு பழி போட்டு என் கணவரை காவலர்கள் அடித்தே கொன்றார்கள். அந்த அதிர்ச்சியில் என் பெரிய மகன் இறந்து விட்டான். இன்னொரு மகன் காவலர்கள் அடித்த அடியில் காது ஜவ்வு கிழிந்து மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான். 13 வருடங்கள் எங்கள் வழக்கு நடந்தது. வழக்கில் 2 லட்சத்திற்கும் கிட்டத்தட்ட வந்த பணத்தில் ஒரு லட்சம் வங்கியில் போட்டு விட்டேன்.

-விளம்பரம்-

அதில் வரும் பணத்தை தான் மாதம் மாதம் நான் வாங்கி வருகிறேன். மீதம் பணத்தை என்னுடைய கொழுந்தனுங்களுக்கு கொடுத்துவிட்டேன். இப்போது அவர்கள் உயிருடன் இல்லை. நான் என் மகள், மருமகன், பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறேன். அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள். உடல்நிலை காரணமாக என்னால் இப்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

Advertisement