‘இந்தியில் பேசுவதால் அறை’ – பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய் பீம் காட்சி குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்.

0
714
Prakash
- Advertisement -

ஜெய்பீம் படத்தில் இந்தியில் பேசியவரை பளாரென்று அடித்த காட்சிக்கு பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்து வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-
Jai Bhim: Prakash Raj trends after his character slaps a man for speaking  in Hindi and not Tamil – see Twitter reactions

பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெய்பீம் படத்தில் பிரகாஷ் ராஜ் அவர்கள் ஐ.ஜி பெருமாள் சாமியாக நடித்திருந்தார். படத்தில் திருட்டுப்போன நகைகளை விசாரிக்க பிரகாஷ்ராஜ் அவர்கள் அடகு கடை வைத்திருப்பவர் இடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த அடகுக் கடைக்காரர் தமிழ் தெரிந்தும் இந்தியில் பேசுகிறார்.

இதையும் பாருங்க : உங்களால NNN விரதமே கலைஞ்சிடிச்சி – மாளவிகாவின் ஆதிகால லுக் போட்டோ ஷூட்டால் புலம்பிய ரசிகர்கள்.

- Advertisement -

அதனால் அவரை பளார் என்று பிரகாஷ்ராஜ் கன்னத்தில் அறைந்து தமிழில் பேசு என்று கூறியிருப்பார். இந்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு பிரகாஷ் ராஜ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையை பார்க்காமல், அவர்களுக்கு நடந்த கொடுமையைப் பற்றி யோசிக்காமல் நான் அடித்ததை தான் பார்த்தீர்களா? நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா?

ஒரு வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி இடம் உள்ளூர் மொழி தெரிந்து கொண்டே கேள்வி கேட்காமல் இருப்பதற்காகவும், அவர் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவும் இந்தியில் பேசினார். பின் அந்த அதிகாரி எப்படி நடந்து கொள்வார்? யாராக இருந்தாலும் இதை தான் செய்வார்கள். அதோடு கல்வியே தெரியாத பழங்குடியின பெண்ணுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம் என்று கூறியுள்ளார். தற்போது பிரகாஷ்ராஜ் கூறிய பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement