எங்கள வச்சி கோடி கோடியா சம்பாதிச்சிட்டு, எங்களுக்கு ஒரு உதவியும் பண்ணல – நிஜ செங்கேனி ஷாக்கிங் பேட்டி.

0
725
jaibhim
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய் பீம். மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்றனர்.

-விளம்பரம்-
Image

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் இந்த படத்தை கண்டித்து ஒரு சில சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர். அதிலும் சிலர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தில் வந்திருப்பதாகச் சொல்லி சூர்யா மீதும் இயக்குனர் மீதும் கண்டனம் தெரிவித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்கள் இட்டும் வருகின்றனர்.

- Advertisement -

இந்த படம் வெளியான பின்னர் உண்மையான செங்கேணி , ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை பலர் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வந்தனர். அந்த வகையில் அவரின் பேட்டியில் அவரின் உண்மையான வறுமை நிலையை கண்டு நடிகர் லாரன்ஸ், தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக கூறி இருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் சூர்யா, பார்வதியின் வங்கி கணக்கில் 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு அதில் இருந்து வரும் வட்டி அவரின் வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் படத்தின் நாயகி செங்கேணி அதாவது உண்மையான ராஜக்கண்ணு மனைவி பார்வதி சமீபத்தில் சூர்யா குறித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, எங்களுக்கு படம் எடுத்ததே தெரியாது. எங்களிடம் ஒரு அனுமதியும் கேட்கவில்லை. சூர்யா எனக்கு எந்த உதவியும் பண்ணவில்லை. சூர்யா என்னை நேரில் பார்க்கவில்லை. எனக்கு ஏன் உதவி? செய்ய மாட்டுகிறார்கள். இதற்காக நான் மனு கொடுத்தேன். ஆனால், யாரும் எனக்கு உதவி செய்யவில்லை.

-விளம்பரம்-

அதோடு எனக்கு உதவி பண்ணுங்க என்று சூர்யாவிடம் கேட்டேன். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. என் கதையை வைத்து கோடி கணக்கில் சூர்யா சம்பாதித்து விட்டார். ஆனால், எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. ஏதாவது ஒரு வீடு, என் பேர பசங்களுக்கு வேலை என்று எதாவது ஒன்று செய்து கொடுங்கள் என கண்ணீர் மல்க நிஜ செங்கேணி அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement