அஞ்சலியுடன் பழகுவது உண்மை தான்.! கண்டிப்பாக காதல் திருமணம் தான்.! நடிகர் ஜெய் பேட்டி.!

0
892
- Advertisement -

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும், எங்கேயும் எப்போதும்’என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகப் பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை.

-விளம்பரம்-

சமீபத்தில் இதுகுறித்து பேசிய ஜெய் எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது’ என்று கூறியிருந்தார். மேலும், ’மகளிர் மட்டும்’படத்துக்காக நடந்த தோசை சுடும்போட்டியில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர்.

- Advertisement -

அஞ்சலியின் பிறந்த நாளன்று ஜெய் காதல் பொங்க அனுப்பிய வாழ்த்து பரபரப்பைக் கிளப்பியது. இதனால் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக வெளியில் சுற்றுவதாகவும், இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

இது பற்றி ஜெய் ஒரு பேட்டியில் கூறும்போது, ‘நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி சொல்லவென்று தெரியவில்லை. ஆனால் அவர் என் காதலி அல்ல, தோழிதான். எங்களுடைய நட்பு தொடரும் இன்னும் என் திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை. திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், கண்டிப்பாக காதல் திருமணம்தான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement