சுப்ரமணியபுரம் படத்தால் இத்தனை படங்களில் எல்லாம் நடிக்க முடியல – தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்கள் குறித்து கலங்கிய ஜெய்.

0
213
jai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெய். இவர் விஜயின் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்திருந்த பகவதி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் சென்னை-28, சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

இருந்தாலும் சமீபகாலமாக இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் வீரபாண்டியபுரம். இதனைத் தொடர்ந்து இவர் பிரேக்கிங் நியூஸ், குற்றம் குற்றமே, காபி வித் காதல், எண்ணித் துணிக, காக்கி உட்பட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பார்ட்டி. இந்த படம் கூடிய விரைவில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : என்னையும் என் பொண்ணையும் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்துரார் – கணவரை பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சீரியல் நடிகை புகார்.

- Advertisement -

பட்டாம்பூச்சி படம்:

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டாம்பூச்சி. இந்தப் படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இவர் ஒரு சைக்கோ கொலைகாரன் ஆக நடித்திருக்கிறார். இதில் சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பத்ரி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை குஷ்பு தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி, ஹனிரோஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஜெய் மற்றும் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள்.

ஜெய் அளித்த பேட்டி:

அந்த வகையில் சமீபத்தில் ஜெய் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தான் தவறவிட்ட படங்கள் குறித்து கூறியிருந்தது, நான் திரையுலகில் ஹிட்டான பல படங்கள் தவற விட்டிருக்கிறேன். அந்த படங்கள் எல்லாம் நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சுப்பிரமணியம் படத்தை தொடர்ந்து நான் நடிக்க வேண்டியது நாடோடிகள் படம். அதேபோல் சுப்பிரமணியம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு எஸ்எம்எஸ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது.

-விளம்பரம்-

ஜெய் தவற விட்ட படங்கள்:

சுப்பிரமணியம் படத்தில் அதிகமாக தாடி வைத்துக்கொண்டு நடிக்க வேண்டி இருந்ததால் என்னால் உடனே மற்ற படங்களில் நடிக்க முடியவில்லை. அதனை அடுத்து சுப்பிரமணியபுரம் பட வெளியீட்டுக்குப் பின்னர் கௌதம் மேனன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயம் நான் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்ததால் அவரின் படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் கௌதம் மேனன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கும் போது தான் நான் அவரது இயக்கத்தில் தவறவிட்ட படம் விண்ணைத்தாண்டி வருவாயா என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நான் தவறவிட்ட படம் ராட்சசன்.

வைரலாகும் ஜெய் பேட்டி:

இந்த படம் குறித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இயக்குனருடன் நான் பேசி வந்தேன். ஆனால், அந்த படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த நேரத்தில் நான் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகி விட்டேன். அதனால் அந்த படத்திலும் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார். இப்படி ஜெய் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஒருவேளை இந்த படங்களில் எல்லாம் ஜெய் நடித்திருந்தால் அவருடைய திரை பயணமே மாறிப் போயிருக்கலாம் என்றும் கூறிவருகிறார்கள்.

Advertisement