என்னையும் என் பொண்ணையும் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்துரார் – கணவரை பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சீரியல் நடிகை புகார்.

0
161
- Advertisement -

பண மோசடி செய்தது மட்டும் இல்லாமல் வலுக்கட்டாயமாக தாலி கட்டிய நபரை கைது செய்ய வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை பைரவி அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி. இவர் தமிழில் சில சீரியல்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is bairavi.jpg

பின் கருத்து வேறுபாடு கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னுடைய கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். அதாவது தான் சினிமா பீல்டில் இருப்பதாகவும், சினிமாவில் நடிக்க சான்ஸ் தருவதாகவும் சொல்லி இருக்கிறார். அவருடைய பேச்சை அப்படியே பைரவியும் நம்பியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பைரவி இடம் ஏமாற்றி பணம் கேட்டு வாங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் சொன்ன பதில்.

- Advertisement -

நடிகை பைரவி போலீசில் புகார்:

அதற்கு பின்பு தான் அந்த நபர் தன்னை ஏமாற்றி பணமோசடி செய்து தப்பித்து விட்டார் என்பது பைரவி தெரிகிறது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக பைரவி சின்னதிரை சங்கத்தில் உள்ள சிலரிடம் அழுது புலம்பி இருக்கிறார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, அவருடைய பெயர் ராஜா தேசிங்கு சுப்பிரமணி. சினிமா இயக்குனர், தயாரிப்பாளர் என்று சொல்லி தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு ஏமாற்றுவது தான் அவருடைய வேலை.

புகாரில் பைரவி சொன்னது:

நிறைய பேரை ஏமாற்றி இருக்கார். முதலில் என்னை நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார். ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பில் சின்ன சிக்கல் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்றார். பின் நீங்கள் அதை பண்ணுங்கள் என்று சொன்னார். படத்தின் இணை தயாரிப்பாளர் நீங்கள் தான் சொன்னார். நானும் அவர் பேச்சை நம்பி என்னிடம் இருந்த நகைகளை எல்லாம் விற்று 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். படத்துக்கு ஆபீஸ் போட்டிருக்கிறேன். ஒரு இடத்தில் கூட்டிட்டு போய் டிஸ்கஸ் பண்ணனும் என்று சொல்லி ஜாகுவார் ஆபீஸ் எல்லாம் போனோம்.

-விளம்பரம்-

பண மோசடி செய்த நபர்:

இதற்கிடையில் அவர் நடத்தையும் வித்தியாசமாக இருந்தது. ரொம்ப பக்திமான் போல தன்னை காட்டி என்னை நம்ப வைத்தார். ஆரம்பத்தில் நண்பராக பழகினவர் பின் உரிமை எடுத்து பேசத்தொடங்கினார். அவரை நம்பி நானும் ஏமாந்து விட்டேன். அதோடு அவர் குழந்தை கிட்ட அத்துமீறி நடந்து கொண்டு ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறாராம். எங்ககிட்ட ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி சில கோயில்களுக்கு போய்வரலாம் என்று சொல்லித்தான் திருமணஞ்சேரி கூட்டிக்கொண்டு போனார். அந்த நேரத்திலேயே இவருடைய நடவடிக்கைகள் மேலே எனக்கு சந்தேகம் வந்தது.

பாலியல் தொழிலில் வற்ப்புறுத்தல்:

அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தேன். ஆனாலும், நான் கண்ணை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்து என் கழுத்தில் தாலியைக் கட்டி விட்டார். அதனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. பின் அவர் தொந்தரவு அதிகமாகிவிட்டது. அந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் என்னை வற்புறுத்தி கட்டாயமாக உறவு கொண்டார். தற்போது என்னையும், என் பெண் குழந்தைகளையும் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார். அவரை கைது செய்ய வேண்டும். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement