இதனால் தான் இந்த முறை உலக கோப்பையை யாரும் கண்டுகொள்ளவில்லை – மோடி மைதானத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷம், பிரபலங்கள் பதிவு.

0
1983
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பாய் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகினறனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர். இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று இருந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

30.3 ஓவரிலேயே இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.

-விளம்பரம்-

அதே சமயத்தில் . நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டுள்ளனர். போட்டி நடைபெறும் போது ”ஜெய் ஸ்ரீராம்” என முழங்கும் பாடல்களும் மைதானத்தில் ஒலிக்கப்பட்டுள்ளன. அதே போல ஐசிசி நடத்திய போட்டியை போல் தெரியவில்லை என்பதே உண்மையாகும். மாறாக அது பிசிசிஐ நடத்திய இருதரப்பு தொடரை போல் இருந்தது என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் விமர்சித்து இருந்தார்.

இந்த வீடியோக்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வர பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆடை பட இயக்குனரும் லியோ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் ‘ இதனால் தான் இந்த முறை உலக கோப்பையை யாரும் கண்டுகொள்ளவில்லை. விளையாட்டில் எதற்கு மதத்தை கொண்டு வருகிறீர்கள். இது ஆபத்து என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல இதுகுறித்து பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கீழ் தாரமானது. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement