கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் வெளியாகும் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் குறித்து பார்க்கலாம். ஜெயிலர் படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளன அதில் அனைவரும் தங்களுக்கு அளித்திருந்த பணியை சிறப்பாக செய்து ஜெயிலர் படத்தை வெற்றி பெற வைத்தனர். இந்த படத்தில் கதாநாயகனாக அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி காந்த் இப்படத்திற்கு 110 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்த படத்தில் பெரிதும் சூப்பர் ஹிட் ஆன “காவலா” பாடலில் நடனம் ஆடியதும் மிக முக்கியமான காட்சிகளில் தமன்னா பாட்டியாவிற்கு ரூபாய் 3 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரண்டு கட்சிகள் கேமியோ கட்சிகளுக்காக கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு ரூபாய் 4 கோடியும் மலையாள நடிகர் மோகன்லால்க்கு ரூபாய் 8 கோடியும் ஜாக்கி செரிப்க்கு ரூபாய் 4 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டது. இவர்களுடைய கேமியோ கட்சிகள் ஜெயிலர் திரைபடத்தை மேலும் சிறப்பக்கியது என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் பன்முக தன்மை கொண்ட நடிகைகளுள் சிறந்த ஒருவர் ரம்யா கிருஷ்ணன் இவரின் இந்த ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரம் படத்திற்கு நல்ல வலிமை சேர்த்தது இப்படத்தில் இவருக்கு 80 லட்சமும் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகி பாபுவின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. இவருக்கு ரூபாய் 1 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டது. நடிகர் வசந்த் ரவிற்கு ரூபாய் 30 லட்சமும் நடிகர் சுனில் அவர்களுக்கு 60 லட்சமும் தனது தனி திறமையால் நகைச்சுவை செய்யும் ரெடின் கிங்க்ஸ்லிக்கு 25 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டது. பலதரப்பட்ட சிறுவேட துணை நடிகர்களுக்கு மொத்தமாக ரூ 30 லட்சம்மும் சம்பளமாக வழங்கப்பட்டது.
இயக்குனர் நெல்சனுக்கு விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படத்திற்கு ரூபாய் 8 கோடி வழங்கப்பட்டது ஆனாலும் அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது இருப்பினும் அந்த படம் அனைவருக்கும் லாபத்தை பெற்று தந்தது. ஆகையால் இப்படத்திற்கு நெல்சன் திலிப் குமாருக்கு ரூபாய் 10 சம்பளமாக வழங்கப்பட்டது.
ரஜினிகாந்தை வைத்து இயக்கிய இந்த திரைப்படமானது நெல்சனுக்கு மீண்டும் ஒரு புத்துனர்ச்சியை அளித்துள்ளது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் இடைத்தை மீண்டும் உறுதி செய்தது. அது மட்டுமல்லாமல் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தை தமிழகம் மட்டுமல்லாமல் உலககெங்கிலும் வெற்றியை தேடியை தந்துள்ளது.