சென்னையில் இருந்தாலும் ஆண்டு தவறாமல் ஜல்லிக்கட்டுக்கு தவறாமல் செல்லும் இந்த பாட்டி யார் தெரியுமா ?

0
167
sundarambal
- Advertisement -

ஜல்லிக்கட்டு போட்டியில் 80 வயது மூதாட்டி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தை மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அதிலும் சில ஆண்டுகளாக இந்த கொரோனா தாக்கத்தினால் பொங்கல் பண்டிகையே கொண்டாட முடியவில்லை. இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தாக்கத்திலும், மன வேதனையிலும் இருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று அனைத்தும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாட்டு பொங்கல் அன்று கிராமங்களில் தமிழ் நாட்டு கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்தது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மூன்றாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

அரசு விதித்த விதிமுறை:

மேலும், போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பே கோரோனா நெகட்டிவ் சான்றிதழை போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இப்படி தமிழ்நாடு அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் படி தான் போட்டி நடந்தது. அதுமட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருந்தார்கள். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

சுந்தரம்மாள் பாட்டி செய்யும் வேலை:

இதில் இளைஞர்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் காளைகளை அடக்கினார்கள். இதில் பலர் காயமடைந்தும், வெற்றி பெற்றும் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சுந்தரம்மாள் மூதாட்டி வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மூதாட்டியின் பெயர் சுந்தரம்மாள். இவருடைய சொந்த ஊர் ஆண்டிபட்டி. ஆனால், இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஓட்டேரி பகுதிக்கு குடியேறிவிட்டார். தற்போது இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத் தான் பிழைப்பு நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இதில் வரும் வருமானத்தை வைத்து தான் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு செல்கிறார்.

-விளம்பரம்-

சுந்தரம்மாள் பாட்டி நடன வீடியோ:

சென்னையிலிருந்து ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் சுந்தரம்மாள் பாட்டி தவறாமல் கலந்து கொள்வார். அதுமட்டுமில்லாமல் இவர் பல ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்று போராடி இருக்கிறார். அந்த அளவிற்கு சுந்தரம்மாள் பாட்டி ஜல்லிக்கட்டின் மீது அதிக ஆர்வம் உடையவர். மேலும், ஜல்லிக்கட்டிற்கு சென்றாலும் அங்கு பாட்டி நடனமாடி அங்கிருக்கும் வீரர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம் பேட்டி ஒன்று எடுத்தார்கள். அதில் அவர் கூறியது, எனக்கு ஜல்லிக்கட்டு போட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அது என் உயிருக்கும் மேல். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு மட்டுமில்லாமல் தமிழ் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், அடையாளம் எல்லாம் என்று சொல்லலாம். எனக்கு இரண்டு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பேரன், பேத்தி எல்லோரும் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டில் குதூகலமாக குத்தாட்டம் போட்ட மூதாட்டி

வாழ்த்து குவியும் சுந்தரம்மாள் பாட்டி:

நான் நிறைய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான புகைப்படங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. மேலும், எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் நான் தவறாமல் கலந்து கொள்வேன் என்று கூறுகிறார். அதே போல் மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டில் மூதாட்டி சுந்தராம்பாள் கலந்திருக்கிறார். அப்போது ஜல்லிக்கட்டின் போது இவர் நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இவருடைய வீடியோவை லைக் செய்தும், ஷேர் செய்தும் சுந்தரம்மாள் பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement