ரஹ்மான் எப்படி என்றும் No.1 – ஜேம்ஸ் வசந்தன் பதிவால் கடுப்பான இளையராஜா ரசிகர்கள். அவரின் விளக்கம் இதோ.

0
375
james
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் இளையராஜா மற்றும் Msvயுடன் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து பதிவிட்டு இருந்த ஜேம்ஸ் வசந்தன் ’60-ல் தொடங்கி இசை ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த மெல்லிசை மன்னர் MSV-ன் உச்ச காலத்தில், 76-ல் இசைஞானி இளையராஜா அதிரடியாக உள்ளே வருகிறார். இசையின் அடுத்த பரிமாணத்தைக் காட்டுகிறார்.அவர் கோலோச்சிக் கொண்டிருந்தபோது 92-ல் புயலாக உள்ளே வருகிறார் ARR. திரைப்பட இசையின் எல்லா முகங்களையும் பார்த்துவிட்டதாக நினைத்துகொண்டிருந்த ரசிகர்களின் எண்ணத்தைத் தகர்த்தார்.

-விளம்பரம்-

1960 – 76 = 16 ஆண்டுகள்

- Advertisement -

1976 – 92 = 16 ஆண்டுகள்

1992-2022 = 30 ஆண்டுகள்*

-விளம்பரம்-

*தொடர்ந்து முதலிடத்தில் என்று பதிவிட்டு இருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை பார்த்த பலர் இவரது கருத்தை ஏற்றுக்கொண்டாலும் ஒரு சிலர் ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை ஏற்றுக்கொள்ளாமல் இளையராஜா தான் எப்போதும் நம்பர் ஒன் என்று கூறி வருகின்றனர். மேலும், ஜேம்ஸ் வசந்தனை இளையராஜாவின் ரசிகர்கள் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் : –

சமீப காலத்தில் நாம் சமூக ஊடகங்களில் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் ஒரு சொல் ‘வன்மம்’. மகிழ்ச்சிதான்! உறங்கிக்கொண்டிருந்த சொல்லுக்கு புத்துயிர் கிடைத்ததில். ஆனால், எதற்கெடுத்தாலும் அதைச் சொல்லும்போது அது பயனற்றுப் போகிறது. It gets redundant.

நான் இசைக்கலைஞன் என்கிற பார்வையில் இசையமைப்பாளர்களைப் பற்றிய என் ஆய்வுகளைப் பகிரும்போது “உங்களுக்கு இளையராஜாவின் மேல் ‘வன்மம்'” என்று சில மேதைகள் கூறுவதுண்டு. அதற்கு என்ன பொருள் என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.

நான் இளையராஜா இசையக் கேட்டு வளர்ந்து, கற்றறிந்து இசையமைப்பாளனாகிய ஒருவன் என்பதைப் பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன் – பெருமையுடன்.

இசையில் என் மானசீகக் குரு இளையராஜா. அது எப்படி மாறும்?

ஒரு பண்பட்ட மனிதனாக என்னைக் கவர்ந்தவர் ரஹ்மான். அவரிடம் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

ஒரு சிறந்த கலைஞனாக விளங்குவதை விட ஒரு சிறந்த மனிதனாக வாழ்ந்து கடந்து செல்வதுதான் என் வாழ்க்கையின் நோக்கம். அதற்கு உதவும் ரஹ்மானை நேசிக்கிறேன்.

ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு –

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அரை மணி நேர இசை நிகழ்ச்சி வழங்கியது ரஹ்மானின் Sunshine Orchestra. இந்த இசைக்குழுவைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்?

சாதாரண அரசு பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த வறிய நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த பல சிறுவர், சிறுமியரை அழைத்து வந்து, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை வைத்து அவர்களுக்கு உயர்ந்த தரத்தில் இசையைக் கற்றுத்தந்து இன்று அவர்களைக் கொண்டு ஒரு Mini Symphonic Orchestra கலைஞர்களாக சர்வதேச தரத்துக்கு உயர்த்தி அவர்கள் வாழ்க்கை நிலையை எங்கேயோ கொண்டுபோய் விட்டார் ரஹ்மான்.

போட நல்ல துணிமணி இல்லாமல் இருந்த ஒரு தலைமுறை இன்று கோட்டு சூட்டுடன் ஒரு அற்புதக் கலையை அனாயாசமாக பல வெளிநாட்டவர் முன் வழ்ங்கிக்கொண்டிருந்தது அன்று. என் கண்களில் கண்ணீர். இதைத் தெரிந்த பலருக்கும் அதே உணர்வுதான்.

தனக்கு இந்த அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் தந்த தமிழ்ச்சமூகத்துக்கு இப்படி திருப்பி எதுவுமே வேறு எந்த இசைக்கலைஞனும் செய்ததில்லை. அதனால் அவர் எல்லாரையும் விட உயர்ந்த மனிதனாகத் திகழ்கிறார்.

கலைஞனாக மட்டுமன்றி ஒரு மனிதனாகவும் வெற்றியடந்த ரஹ்மான் வரலாற்றில் நிலைப்பான்! என் மனதில் என்றும் தங்குவான்

Advertisement