தம்பி ரவி,தமிழனின் வீரத்துக்கு முன்னால் பொடியன் நீ – ஆளுநரை சூசகமாக சாடி நீண்ட பதிவை போட்ட ஜேம்ஸ் வசந்தன்.

0
557
James
- Advertisement -

தமிழக சட்டப்பேரவை ஓட்டத்தின் நடுவே ஆளுநர் வெளியேறிய சம்பவம் வெறும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இது குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அப்போது தமிழில் ஆளுநர் உரையாற்றத் தொடங்கினார். ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், தமிழ்நாடு எங்கள் நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஆளுநரை பேரவையிலிருந்து வெளியேறக்கோரி அமளியில் ஈடுபட்டனர்.

-விளம்பரம்-

ஆனால், ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல், தனது உரையை தமிழில் தொடங்கினார். அப்போது உரையில் இடம்பெற்ற “திராவிட மாடல்” என்னும் வார்த்தையை ஆளுநர் வாசிக்கவில்லை என்று தி மு க சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபையில் ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, அவரது தன்னிச்சையான உரை சபை குறிப்பில் இடம்பெறாது என கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனை சற்றும் எதிர்பாராத ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

- Advertisement -

இந்த விவகாரத்தை தொடர்ந்து சமயத்தில் குடிமைப்பணி தேர்வாளர்கள் உடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ரவி நிர்வாக ரீதியாக ஒன்று அரசு எனக் கூறுவதில் தவறில்லை ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் காரணத்திற்காக ஒன்றிய அரசு என்று கூறுகிறார்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று யாரும் பிரச்சனை செய்தது இல்லை ஒரு இந்திய மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வது அனைவருக்கும் பயன் தரும் அதே நேரம் இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி ஹிந்தி தான் எனவே இந்தியை கற்றுக் கொள்வது பெரிய அளவில் உதவும் என்று பேசி இருந்தார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் :-

-விளம்பரம்-

தம்பி ரவி,

தமிழனின் வரலாறுக்கு முன்னால், தமிழனின் வீரத்துக்கு முன்னால், தமிழனின் தீரத்துக்கு முன்னால், தமிழனின் திறனுக்கு முன்னால், தமிழனின் அறிவுக்கு முன்னால், தமிழனின் துணிவுக்கு முன்னால், தமிழனின் தெளிவுக்கு முன்னால் பொடியன் நீ.

அதனால்தான் “தம்பி”!

எங்கள் மொழியைப் பற்றி, எங்கள் இனத்தைப் பற்றி, எங்கள் மண்ணைப் பற்றி, எங்கள் தொன்மையைப் பற்றி எங்களுக்குத் தெரியும். உன்னைப் போன்றவர்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உனக்கு இந்த ஆயுள் போதாது!

உலகுக்கே பேசக்கற்றுத் தந்த இனம். மானத்தையும், வீரத்தையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இனம். எங்கள் இனப்பெருமைக்கு முன்னால் நீ தூசு கூட இல்லை! பதரான நீ எங்களை உரசிப் பார்க்காதே!

திருந்தினால் முழுதாக ஊர்போய்ச் சேரலாம்!
முரண்டுபிடித்தால் திருத்தப்படுவாய் – ஒவ்வொரு தமிழனாலும், தமிழச்சியாலும்! – என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement