இளையராஜா விவகாரம், விமர்சித்த செய்யாறு பாலு – ஜேம்ஸ் வசந்தனின் விளக்கம்.

0
677
Seyyaru
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இவரது இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்து வந்தது. அந்த வகையில் செய்யாறு பாலு இந்த விவாகரத்தில் தன்னுடைய கருத்தை பேசி இருந்தார். இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் ‘இளையராஜாவை நான் விமர்சித்ததைப் பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்பவர் IBC Tamil சேனலுக்கு ஒரு பேட்டியில் சில கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார். இப்படி வருகிற rejoinders எதையும் நான் பார்ப்பதில்லை. ஒருவர் வலியுறுத்தியதால் என்னைப் பற்றிப் பேசிய பகுதியைப் பார்த்தேன்.

-விளம்பரம்-
  1. இளையராஜாவின் மேல் நான் காட்டுவது மதம் சார்ந்த வன்மம் என்று. இதை அவருடைய புரிதலாக எடுத்துக்கொள்கிறேன். இதை விட்டுவிடுகிறேன்.
  2. தொலைக்காட்சியில் சிறுபிள்ளைகளுக்கான பாடல் திறன் போட்டியில் அந்தக் குழந்தைகளை “அறிவிருக்கா.. அது இருக்கா இது இருக்கான்னு” கன்னாபின்னாவென்று பலமுறை நான் திட்டியதாகச்
    சொல்லியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது ஒரு போட்டியாளர் குழந்தை அல்லது அதன் பெற்றோர் என யாராவது ஒருவர் சொல்லட்டும், அல்லது அந்த நிகழ்ச்சியில் நான் அப்படி பேசிய காணொலியின் பகுதி எதையாவது காண்பிக்கட்டும்.

- Advertisement -
  1. சுப்ரமணியபுரம் படத்தில் வந்த ‘சிறு பொன்மணி அசையும்’ பாடலை இளையராஜாவின் அனுமதியின்றி நான் பயன்படுத்தியதாகவும், அதற்கு அவர் எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் பேசியிருக்கிறார்.

திரைப்படத் துறை எப்படி இயங்குகிறது என்கிற அடிப்படைக் கூடத் தெரியாத ஒரு குறைகுடம் திரைப்படப் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அய்யகோ!

அந்தப் பாடத்தில் முதலில் பாடல்களே கிடையாது என்கிற செய்தியோடுதான் எனக்குக் கதையே சொன்னார் சசிகுமார். கதை சொல்லியது கூட எங்களுக்குள் இருந்த நட்புறவின் அடிப்படையில்தான். நான் அப்போது அந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கூட இல்லை. என் அபிப்பிராயத்தைக் கேட்கத்தான் கதை சொன்னார்.

-விளம்பரம்-

மைக் செட் வைத்திருக்கும் ஒரு ஆள் இளையராஜாவின் பாடல் ரெக்கார்டு ஒன்றை எடுத்துப் போட, அந்தப் பின்னணியில் அங்கு அமர்ந்திருக்கும் ஹீரோ எதீர்வீட்டுப் பெண்ணை சைட் அடிப்பதாக ஒரு காட்சி இருப்பதைச் சொன்னார்.

பல நாட்கள் கழித்துதான் “ஒரு கோயில் திருவிழா பாடல் பண்ணிப் பாருங்க சார், இந்தப் படத்துக்கு” என்றார், எந்த விளக்கமும் சொல்லாமல். நான் அந்தப் படத்தின் இசையமைப்பாளனா இல்லையா என்பது கூடத் தெரியாது. அந்தப் பாடலும் உருவாயிற்று.

ஒருசில மாதங்களுக்குப் பிறகு, ஹீரோ சைட் அடிக்கும் காட்சிக்கு நாமே ஒரு பாடல் போடலாம் என்று கெஞ்சாத குறையாகப் பேசிப் பார்த்தேன். “அதற்கு இடமே இல்லை. அந்த இளையராஜாவின் பாடலோடுதான் திரைக்கதையே எழுதி வைத்திருக்கிறேன்” என்றார். அது என்ன பாடல் என்பது கூட எனக்குத் தெரியாது,

James

என்ன நினைத்தாரோ, கொஞ்ச நாள் கழித்து, “சரி, சார். நீங்களே ஒரு பாட்டுப் போடுங்கள்” என்றார். கண்கள் இரண்டால் உருவாயிற்று.

படமெல்லாம் முடிந்து பின்னணி இசைக்கு என் மேசைக்கு வந்தது படம். பார்த்தால் என் பாடலும் இருந்தது, கூடவே ‘சிறு பொன்மணி அசையும்’ பாடல் காட்சியும் இருந்தது. உடனே சசியை அழைத்துப் பாராட்டினேன், அது படமாக்கப்பட்ட விதத்திற்காக. என்ன ஒரு துணிவு வேண்டும், ஒரு முழு பழைய பாடலைப் பயன்படுத்தி காட்சிகள் எடுக்க!

இப்படி, பிற படங்களின் பாடல்களைப் பயன்படுத்துவது ஒரு இயக்குநரின் முடிவாகத்தான் இருக்க முடியுமே தவிர இசையமைப்பாளருடையதல்ல. இது மட்டுமல்ல, எந்தப் படத்திலும்.

பாவம், இந்த செய்யாறு பாலு. இதைப் போன்ற YouTube சேனல்கள் இல்லையென்றால் வாழ்க்கையில் என்ன செய்வார்? யார் இவர்?

பத்திரிகையாளர் என்று தலைப்பில் போடப்பட்டிருக்கிறது. பிழைப்புக்காக எதை எதையோ உளறி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர் என்பதைப் புரிந்துகொண்டேன்.

Advertisement