நம் மொழியைக் கொன்றுதான் நீங்கள் வெல்லவேண்டுமா ? – சூப்பர் சிங்கர் வெற்றியாளரை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்.

0
2215
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் படத்தை அருணா பெற்றுஇருந்தார். இவருக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. இவரை அடுத்து பிரியா இரண்டாவது இடத்தையும், பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

- Advertisement -

பொதுவாக சூப்பர் சிங்கர் ரிசல்ட் விமர்சனத்திற்கு உள்ளாவது வாடிக்கையான ஒரு விஷயம் தான், அந்த வகையில் இந்த சீசன் முடிவும் விமர்சனத்திற்கு உள்ளாகிஇருந்தது. இந்த சீசனில் அருணா பட்டத்தை வென்றதற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வரும் அதே வேளையில் இந்த சீசனில் அப்ஜித் தான் சிறப்பாக பாடினார் அவருக்கு தான் இந்த சீசனில் பட்டம் கொடுத்து இருக்க வேண்டும் என்று பலர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த சீசன் குறித்து பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ”சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் இவர்தான், பாருங்கள், என ஒருவர் யூ-டியூப் இணைப்பு ஒன்று அனுப்பினார். ‘அருணா சிவயா’ என்பவர் பாடிய காணொலி அது. அவர்தான் பட்டம் வென்றவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் – எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்கிற ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் இடம்பெற்ற பெரும்புலவன் பாரதியின் பாடலைப் பாடினார்.

-விளம்பரம்-

அருமையாகப் பாடினார். இயல்பானத் திறமை கொண்டவர். சங்கீதம் படித்தவரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நல்ல இயற்கை ஞானம் உள்ளவர் என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. ஆனால், தமிழைக் கொன்று பட்டம் வென்றுள்ளார் என்பது தெரிந்து வேதனையாக இருந்தது. இன்னும் எத்தனைக் காலந்தான் “நாட்டுப்புறப் பாடகர்கள் கொச்சையாகத்தான் பாடுவார்கள்’ என்று விட்டுக்கொண்டிருக்க முடியும்?

அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது அது இயல்பான இசை என சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அவற்றைக் கடக்கிறோம். இவர் திரைப்படப் பாடல்களைப் பாட முன்வந்திருக்கிறார். அதுவும் ஒரு போட்டித்தளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தப் பாடல்களிலுள்ள இசை நுணுக்கங்களை அட்சரம் பிசகாமல் பாடக் கற்றுக்கொள்பவருக்கு அவருடைய மொழியின் நுணுக்கம் மட்டும் தெரியாதாமாம். நாமும் அதைக் கண்டுகொள்ளக் கூடாதாம்.

என்ன பெரிய நுணுக்கம்? ல, ள, ழ வை வேறு எப்படி உச்சரிக்க முடியும்? உச்சரிக்க வரவில்லையென்றால் பொதுமேடைக்கு வராதீர்கள். கற்றுக்கொண்டு பிறகு வாருங்கள். வாய்ப்பாட்டு இசை என்பது இசையும் மொழியும் இரண்டறக் கலந்தது. சொற்கள் இல்லாமல் பாடல் இல்லை. அப்படியிருக்க, இசையால் மயக்கி, செவிகளை ஏமாற்றி, நம் மொழியைக் கொன்றுதான் நீங்கள் வெல்லவேண்டுமா?

James

பாடகர் இப்படியென்றால் அங்கு உட்கார்ந்து தலையாட்டிப் பொம்மை போல ரசித்துக்கொண்டிருந்த மொழிசெவிட்டு நடுவர்கள்தான் பெரிய குற்றவாளிகள். அங்கிருந்த ஒரு நட்சத்திர நடுவர் கூட இவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டவில்லை. மொழி தெரிந்தால்தானே பிழை தெரியும்! இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்க வாய்ப்பில்லை. இதே சூப்பர் சிங்கர் பாடகர் சிலர் ஹிந்தி நிகழ்ச்சிகளில் சென்று பங்கெடுத்தபோது பிசகின்றி அவர்கள் மொழியைப் பாடியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழ் என்றால் நம் பாடகர்களுக்கு அவ்வளவு இளக்காரம்.

Advertisement