பல லட்ச இளைஞர்களையும் தவறாக வழி நடத்துவதுதான் பிரச்சனை – மாடர்ன் மத போதகர் ஜான் ஜெபராஜ் குறித்து ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு.

0
3361
james
- Advertisement -

சமீப காலமாக சமூக வலைதளத்தில் பல்வேறு கிறிஸ்துவ மத போதகர்கள் பிரபாலகி வருகின்றனர். கடந்த ஆண்டு கூட ‘கிருப கிருப’ பாடல் மூலம் சமூக வலைதளத்தில் சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார் கிறிஸ்துவ மத போதகரான டார்வின் எபினேசர். இவரை போல யூடியூபில் படு ஸ்டைலஸ் போதகராக திகழ்ந்து வருபவர் ஜான் ஜெபராஜ். ஆராதனை என்ற பெயரில் குத்தாட்டம் போடுவது, சினிமா பாடல்களை பாடுவது என்று மற்ற கிறிஸ்துவ போதகர்களிடன் இருந்து கொஞ்சம் வித்யாசப்பட்டவர் ஜான் ஜெபராஜ், இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் நடிகர்களுக்கு இணையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வீடியோ குறித்து இசையமைப்பாளரும் பிரபல தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பிரபலமான YouTube திறந்தவுடன் “Pastor John Jebaraj Photoshoot Behind The Scene” என்றொரு வீடியோ கண்ணில் பட்டது. இதையெல்லாம் பார்த்து நேரத்தை வீணடிப்பதா என்று கடந்து போக நினைக்கும்போது, “60,000 views January 20” என்று கண்ணில் பட்டது. அடப்பாவிகளா! 20 நாட்களில் இந்த வீண் வேலையை இத்தனை பேர் பார்க்கிறார்களா’ ‘அப்படி என்னதான் இருக்கிறது!’ என்கிற எண்ணத்துடன் க்லிக் செய்து உள்ளே போனேன்.

இதையும் பாருங்க : சிவராத்திரியில் பிறந்த குழந்தை – ஆணா பெண்ணா என்பதை வித்யாசமான முறையில் அறிவித்த ஹரிஜா.

- Advertisement -

சிம்பு, அனிருத், வருண் தவான், ரன்வீர் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா வரிசையில் இவரும் தன்னை ஹீரோவாக நிலைநாட்டிக்கொள்ள முயல்வது புரிந்தது. அதிலெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.இயேசு கிறிஸ்துவின் பெயரை இணைத்துக்கொண்டு பல லட்ச இளைஞர்களையும் தவறாக வழி நடத்துவதுதான் பிரச்சனை.கிறிஸ்தவர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிந்துகொள்ள அங்கிருந்த comments படிக்க ஆரம்பித்தேன். ஆறுதலாய் இருந்தது. அவர் இரட்சிக்கப்படும்படி அறிவுரை சொல்லியிருந்தார்கள். பலவிதமான எச்சரிக்கைகள் – அன்போடு, பரிவோடு, அக்கறையோடு. வசைகளும் இருந்தன. சத்தியம் சாகவில்லை என தெரிந்து நிம்மதியுடன் வெளியேறினேன்.

“ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” [லூக்கா:9:23]இது சிரமம் என்பதால்தான் எங்களைப் போன்றவர்கள் அவர் பிள்ளைகளாய் இருப்பதோடு நிறுத்திக்கொண்டு, சீஷத்துவத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. நியாயத்தீர்ப்பில் பல தீர்ப்புகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

-விளம்பரம்-
Advertisement