இயேசு எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார் – புனித வெள்ளி பதிவில் கேட்ட நபர். கோபம் கொள்ளாமல் ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம்.

0
356
James
- Advertisement -

இன்று புனித வெள்ளியை முன்னிட்டு ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘இன்று ‘பெரிய வெள்ளி’ (Good Friday). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். கிறிஸ்தவம் கட்டப்பட்டிருக்கும் அடிப்படை இதில்தான்.இந்த நிகழ்வை நினைவுகூறும் வண்ணம் கிறிஸ்தவர் பலரும் சிலுவைகளை அவர்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும், கழுத்தில் தொங்கும் சங்கிலிகளிலும் வைத்துக்கொள்கின்றனர். இன்று இது ஒரு நாகரிகச் சின்னமாகவே மாறிவிட்டது.

-விளம்பரம்-

ஆனால், 1,990 ஆண்டுகளுக்கு முன் ரோமப் பேரரசில் இது ஒரு அவமானச் சின்னம் (Symbol of Shame). ஏனெனில், கொடுங்குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக அவர்களை சிலுவையில் அறைவது வழக்கமாக இருந்தது. இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். இன்றைய சமூகத்தில் யாராவது தூக்குக் கயிற்றை கழுத்துச் சங்கிலியில் தங்கத்தில் செய்து போட்டுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் அன்று, சிலுவை!

- Advertisement -

இயேசுவின் மரணம் இந்த ஈனச் சிலுவையை உன்னதச் சிலுவையாக மாற்றியது!வரலாற்று ஆசிரியரின் அறிக்கைகளின்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் கொல்லப்பட்டது ஏப்ரல் 3, A.D.33. பைபிலில் லூக்கா 23:46-ம் வசனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி பகல் 3 மணிக்கு, “பிதாவே, உமது கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று சொல்லி உயிரை விட்டார்.

எத்தனையோ பேர் இதே சிலுவையில் கொல்லப்பட்டிருந்தாலும் ஏன் இயேசுவின் மரணம் இந்த அடிப்படையையே மாற்றியது? ‘அந்த மரணம் தரும் முடிவில்லா வாழ்வு’ (the death that gave eternal life) என்பதை உணரும், நம்பும் மக்கள்தான் கிறிஸ்தவர். பெயரை மாற்றிக் கொள்வதினாலோ, அந்தக் குடும்பத்தில் பிறப்பதினாலேயோ ஆவதில்லை என்று பதிவிட்டு இருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவிற்கு பல விதமான கமெண்டுகள் குவிந்தது.

-விளம்பரம்-

அதில் ஒரு பயனர் ‘தவறாக நினைக்க வேண்டாம். எனது சந்தேகம். இயேசு மனிதர்களின் பாவங்களை துடைக்க சிலுவையில் தொங்கினார். எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார். அப்படியாயின் இப்போது மனிதர்கள் இன்னும் பாவம் செய்கிறார்கள். இன்னொரு முறை இயேசு வந்து பாவங்களை கழுவுவாரென நம்பியா? பாவத்தை போக்க படைத்த கடவுளே வன்முறையில் இறங்குவாரா? இதை தவிர பாவம் போக்க வேறு வழி இல்லையா ?’ என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சற்றும் கோபப்படாமல் பதில் அளித்த ஜேம்ஸ் வசந்தன் ‘நீங்கள் இவைகளைப் பற்றி என்ன சொன்னாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன். மற்றவரைப் பற்றி எனக்குத் தெரியாது. 1. எனக்கும் இதே கேள்வி இருந்தது; பலருக்கும் உண்டு. இதை விளங்கிக்கொள்ள பலகாலம் ஆனது. அவர் சம காலத்திலும், மரணத்துக்குப் பின்னும் வருகிற யாருக்கும் இந்த பாவமன்னிப்பு உண்டு. ஒரே தகுதி, அதை நம்புவதுதான். 2. அவரை நம்புகிறவரெல்லாம் பாவமே செய்யாத யோக்கியன் என்று பொருளில்லை. பாவ உணர்வோடு, அதை அறிக்கையிட்டால் மன்னிக்க ஒருவர் உண்டு என்கிற உத்தரவாதத்தோடு வாழ்வது. அவ்வளவுதான்! 3. பாவங்களை மன்னிக்க, பாவமே செய்யாத ஒருவர்தான் தகுதியுள்ளவர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கம்தானே. வேறு வழியே இல்லை என்று பைபில் சொல்கிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement