கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார் இவரது எந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் புரிந்து வந்தால் இருந்தது இப்படி ஒரு நிலையில் இளையராஜா பிரித்து விமர்சித்ததற்கான விளக்கம் ஒன்றை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அதில் ' இசைஞானியின் ஒரு கருத்தை நான் விமர்சித்ததை கடுமையாகச் சாடி சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அது ஒன்றும் நான் எதிர்பாராதது அல்ல. இத்தனை காலமாக புகழின் உச்சியில் இருக்கும் அவரைப் போன்றவர்க்கு எவ்வளவு ஆதரவாளர் இருப்பர் என்பது தெரியாதா என்ன?
View this post on Instagram
மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் இந்த சாமானியர் சிந்திக்க விடாமல் தடுக்கப்படுகின்றனர். அவர்களிடம் கேட்கிறேன் - இசைஞானியின் பொதுவெளிச் செயல்பாட்டை விமர்சிக்கிற என்னால்/என்னைப் போன்றவரால் எப்படி அவர் இசையை இன்னமும் ரசிக்க, சிலாகிக்க முடிகிறது? மதம் காரணமாக அவரை வெறுத்தால் எப்படி அவரை என்னுடைய மானசீகக் குருவாகப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ள முடியும்? எப்படி அதே மதத்தைச் சார்ந்த MSV ஐயாவை என்னால் கொண்டாட முடியும்?
கடந்த மாதம் என்னுடைய பார்ப்பன சமூகத்துத் தோழர்களின், குடும்பங்களின் சில நல்ல அம்சங்களைப் பற்றி எழுதினேனே, அவர்களெல்லாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் என் கருத்தைச் சொல்லத்துணிந்த எனக்கு, மத நம்பிக்கையோ, பிற மதங்கள் மீது வெறுப்போ இருந்தால் அதைச் சொல்ல அஞ்சுவேனா?ஒற்றுமையாய் வாழ்ந்த இந்த நாட்டில் மறுபடியும் ஒற்றுமை நிலவத்தான் போகிறது என்று திண்ணியாமாக நம்புகிறவன் நான்.

நீங்களும் நானும் இதே தமிழ்ச் சமூகத்தில் சகோதரர்களாய் கைகோர்த்து வலம் வரத்தான் போகிறோம். சமூகவலைதளத்திலகத்தில்கச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு துறவி சொன்ன சாட்டையடி உண்மையை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் - “கடவுள் இருப்பவனுக்கு மதம் கிடையாது; மதம் இருப்பவனுக்குக் கடவுள் கிடயாது.” என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இளையராஜா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில் 'என்னுடைய வேலையில் நான் உண்மையாக இருக்கிறேன் அதனால் என்னுடைய நிலையில் இருந்து தான் நான் பேச வேண்டும் அதை நீங்கள் தலைக்கனம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி எல்லோரும் சொல்வது அது தான் அவர் மிகவும் தலைக்கணம் பிடித்த ஆள் என்று என்னை தலைக்கனம் பிடித்தவன் என்று சொல்பவனுக்கு எவ்வளவு தலைக்கனம் இருக்கணும்' என்று கூறி இருந்தார்.

இளையராஜாவின் இந்த பதில் ஜேம்ஸ் வசந்தன் போன்ற ஆட்களுக்கு தான் என்று ரசிகர்கள் குறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இளையராஜாவின் இந்த பேட்டியை தொடர்ந்து மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் ஜேம்ஸ் வசந்த பெயரை குறிப்பிடாமல் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் '' என்று குறிப்பிட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவை கண்ட பலரும் இளையராஜாவை தான் சொல்கிறார் என்று கமண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.






