கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர் சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசியது போன்ற விடியோக்கள் இணையத்தில் பரவிவருகிறது. சீமானின் பேச்சுக்களை பொறுத்த வரைக்கும் அது மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெரும் இருப்பினும் அவரின் சில கருத்துகள் சில நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தற்போது தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தற்போது சீமான் பேசிய பேச்சுக்களானது அக்கட்சியின் தொண்டர்களிடம் இடமே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் சாத்தானின் குழந்தைகளாகி பல ஆண்டுகள் ஆகிடுச்சி!
— TPK IT Wing (@Tpkitofficial) July 31, 2023
இந்த நாட்டில் நடக்கும் அநீதி, அக்ரமத்திற்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான்.
RSS = BJP = NTK pic.twitter.com/GJMP5MTQrv
மணிப்பூரில் நடைபெற்ற சம்பவங்களை கண்டித்து திருவள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களை பற்றி அவதுறாக பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிரனரும் பல கண்டனகளை தெரிவித்து வருகின்றனர்.
அக்கூட்டத்தில் பேசிய சீமான் ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மணிப்பூர் மக்களை பற்றி பேசி நமக்கு ஒரு லாபமும் இல்லை எனவும் அங்குள்ள கிறித்துவர்கள் ஓட்டுபோட போவதில்லை எனவும் இங்கு உள்ள கிறித்துவர்களும் நமக்கு ஒட்டு போட போவதில்லை. ர் நாம் தான் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் தேவனின் குழந்தைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்கள் சாத்தனின் குழந்தைகளாக மாறி பல வருடங்கள் ஆகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் கூறிய அவர் “இந்த நாட்டில் அனைத்து அநிதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பு கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தான்” எனவும் அவர் கூறினார். மேலும் கூறிய “தொடர்ச்சியாக 18% விழுக்காடு ஓட்டு வைத்திருக்கும் பல ஆண்டுகளாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட்டு நாட்டை தெருவில் விட்டது இவர்கள் தான். நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு காரணமே இவர்கள் தான் இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொள்வது இவர்கள்தான் பாவத்தையே செய்கிறார்கள்?”. என்றும் அவர் கூறினார். என்றும் அக்கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.
இவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் ‘ சீமான் அவர்கள் சொன்ன ஒரு கடுமையான கருத்தைக் குறித்து பலர் என்னிடம் கருத்து கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். என்னை அது ஒன்றும் பாதிக்கவில்லை. இவர் யாரைத் திட்டினாரோ, அவர்களுக்கு எந்த இழப்புமில்லை; இவருக்குக்குத்தான் பெரிய இழப்பு. ஏனென்றால், இவர் வாக்கு அரசியலில் இருப்பவர்’ என்று பதிவிட்டு இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் சீமானின் இந்த கருத்து குறித்து மறைமுக பதிவு ஒன்றை போட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘ ஒவ்வொருவருக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரு தனிப்பட்டக் கருத்து இருக்கிறது. ஆனால் அதை வெளியில் பேசுவதில்லை. அதற்கு அச்சமோ, வெட்கமோ காரணம் இல்லை. இதுதான் மனித நாகரிகம்.வெளிப்படையாகப் பேசுகிறோம் என்று ஒருவர் எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது. இங்கிதமும், பண்பும், அனுசரணையும், தன்னை அந்தக் கருத்து ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் திருப்பித் தாக்கக்கூடும் என்பவைதான் காரணங்கள். இப்படித்தான் மனித சமூகம் இயங்குகிறது.
நாம் வீட்டிற்குள் பேசுகிறவைகளை வெளியரங்கில் பேசமாட்டோம்; பேசவும் முடியாது. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பொருந்தும்.நம் சுற்றத்தாரைப் பற்றி பல கருத்துகள் நமக்கு உண்டு. ஆனால், நம் வீட்டிற்கு வந்து அவர்கள் இறங்கியவுடனே இயல்பாகத்தான் இயங்குகிறோம். அது அப்படித்தான். நம் நண்பர்களைப் பற்றி நமக்குச் சில விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர்கள் தொலைபேசியில் அழைத்தவுடன் அதைப்பற்றிய எண்ணமே இல்லாமல் உரையாடுவோம். இதுவும் இப்படித்தான்.
தெருவிலங்குகள் போல நேரடியாக எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டிக்கொண்டு திரிந்தால் அது கற்கால வாழ்க்கைக்கு நம்மை இட்டுச்சென்று விடும்.இப்படித்தான் மனித நாகரிகம் வளர்ந்திருக்கிறது. எல்லாரும் இதற்கு உட்பட்டுத்தான் வாழ்ந்து வருகிறோம். பொதுநலன்களைப் பாதிக்கிற விதத்தில் சிலர் நடந்துகொள்ளும்போது ஒரு சமூகமாய் அவர்களை, அவர்கள் செயல்பாடுகளைக் கடிந்துகொண்டும், கண்டித்துக்கொண்டும் இயங்குகிறோம். இது இப்படித்தான் தொடரும்.’ என்று பதிவிட்டுள்ளார்.