லேடி மாதிரி பேசுவானே அவனால தான் என் மார்க்கெட் போச்சி – TR குறித்து Tms பேசிய வீடியோவை பகிர்ந்து நக்கலடித்த ஜேம்ஸ் வசந்தன்.

0
234
- Advertisement -

டி ராஜேந்தரின் குறித்து புலம்பி தள்ளி மறைந்த பாடகர் டி.எம்.எஸ் பேசி இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து நக்கல் செய்துள்ளார் இசையைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் TMS அவர்கள் டி.ராஜேந்தர் படத்திற்கு பின்னர் தான் தனது சினிமா வாழக்கையே நாசமாக போனது என்று பேசி இருக்கும் வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சிரித்து இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். சினிமா உலகில் இசையில் தனெக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவருக்கு என்று இன்று வரை ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். சௌந்தரராஜன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்று உள்ளார்.இவரின் காதல், துள்ளல், சோகம், தத்துவம் என கலவையான பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும் அரசியல் காட்சிளை உயர்த்தி 4 ஆயிரம் பாடல்கள், 3 ஆயிரம் பக்தி பாடல்கள் என நாற்பது ஆண்டுகாலம் தமிழ் இசையுலகில் முடி சூடா மன்னனாக வாழ்ந்தவர் டி.எம் டி.எம் சவுந்தர்ராஜன். தற்போது திரையிசை திறமை கொண்ட பாடகர்கள், புதிய தொழில் நுட்பங்கள் என பலவிதமாக மாறி விட்டாலும் டி.எம்.எஸ் குரலில் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் ஒருதலை ராகம் படத்தில் நான் ஒரு ராசி இல்லா ராஜா பாடல் பாடியது குறித்து பேசியுள்ள tms ‘ அந்தப் படம் பாடிய பின்னர் தான் எனக்கு மார்க்கெட் போனது என்னுடைய பெயர் சௌந்தரராஜன் என்னை போய் நான் ராசி இல்லா ராஜா என்று பாட வைத்தான். அப்போது கூட நான் ஒரு ராசியில் ராஜா என்று என் வாயில் வருகிறது வேண்டாம் என்று சொன்னேன் அதற்கு அவன் ஹீரோ தான் சார் இந்த பாடலை பாட போகிறார் என்று சொன்னார். அதோடு நிற்காமல் என் கதை முடியும் நேரம் இது என்றும் பாடலை பாட வைத்தார்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement