புத்தகத்தில் மோடியின் சிறு வயது முதலை கதை -ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த பதிவு வைரல்.

0
872
- Advertisement -

பிரதமர் மோடி குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சுப்பிரமணியம் என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பசங்க மற்றும் ஈசன் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருக்கிறார். அதேபோல் இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இப்படி இவர் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

- Advertisement -

ஜேம்ஸ் வசந்தன் குறித்த தகவல்:

இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார்.

சோசியல் மீடியாவில் ஜேம்ஸ் வசந்தன்:

மேலும், சமீபத்தில் வெளியான ‘அரியவன்’ என்ற படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ஜேம்ஸ் வசந்தன் சமீப காலமாக தனது முகநூல் பதிவுகள் மூலம் அடிக்கடி கவனமீர்த்து வருகிறார். இவர் இணையதளத்தில் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். பல சமயங்களில் இவருடைய கருத்துக்கள் சர்ச்சைகளில் முடிந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மோடி குறித்த பதிவு:

அது மட்டும் இல்லாமல் இவர் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார். இந்த நிலையில் மோடி குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர வைரல். அதாவது நெட்டிசன் ஒருவர், வெற்றி நாயகர் நரேந்திர மோடி தொடர்பான புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் தாய், மகன் தோல் மீது இருக்கும் குட்டி முதலையை பார்த்து அதிர்ந்து மகனிடம், மோடி வீடுகளில் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள்.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு;

நீ முதலையை தூக்கி வந்து இருக்கிறாய் என்று கேட்டார். உடனே அந்த மகன், அம்மா இதுவும் ஒரு பிராணி தானே என்றார். இப்படி இந்த சிறு வயதிலேயே மோடிக்கு எத்தனை தைரியம் பாருங்கள். அவருக்கு அப்போது ஐந்து வயது தான் இருக்கும் என்று அந்த பக்கத்தில் கூறியிருக்கிறது. இதை அந்த நெட்டிசன், ஏன் பாசு 5 வயசிலிருந்தே இப்படி பொய்யும் புளுகுமா இருக்கீங்களே, போர் அடிக்கலயா? என்று விமர்சித்து இருக்கிறார். இதை தான் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.

Advertisement