நீ எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக கூட இரு, என்ன தொடக்கூடாது – முகநூலில் ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த ரஜினியின் வீடியோ.

0
2625
James
- Advertisement -

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்ட ரஜினி குறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பை தாண்டி ஆன்மீகித்திலும் நம்பிக்கை கொண்டவர். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். அங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி ஆசிரமத்திற்கு சென்று இருந்தார். ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார். அங்கு உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி இருந்தார். இது குறித்து பலரும் ரஜினியை விமர்சித்து இருந்தார்கள்.

- Advertisement -

அதற்கு ரஜினியும் விளக்கம் கொடுத்து இருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. அதோடு ரஜினி அவர்கள் யோகிகளை சந்தித்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிரபலமான கோயில்களுக்கு சென்றும் வருகிறார். இந்த நிலையில் கோயிலில் ரஜினிக்கு நடந்த அவமரியாதை குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி குறித்த வீடியோ:

அதை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ரஜினிகாந்த் அவர்கள் கோயிலில் யோகிகள் இடம் பணம் கொடுத்திருக்கிறார். அவர் கையால் வாங்கவில்லை. உடனே ரஜினி தட்டில் வைத்திருக்கிறார். அதன் பின் தன்னுடைய கையில் இருந்த பூவை அந்த யோகி வேறொரு சுவாமியிடம் கொடுத்து இருக்கிறார். இதை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து, நீ எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக கூட இரு, என்ன தொடக்கூடாது டா சூத்திர பயலே என்று விமர்சித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம்:

இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகம், சுனில் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்திருக்கிறது.

ரஜினி நடிக்கும் படம்:

இதுவரை இந்த படம் 650 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதனை அடுத்து ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி அவர்கள் தன்னுடைய மகள் இயக்கியிருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement