“பிராமிணர்கள் தான் சுப்பீரிம் கம்யூனிட்டி” என்ற பாஸ்கிக்கு ஆதரவு தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன் – விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
649
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாஸ்கி என்றால் உடனே நியாபகம் வருவது அவருடைய காமெடிகள் தான். இவர் மொட்டைக்காகவே மொட்டை பாஸ்கி என்று பிரபலமானவர் இவர். பத்திரிகையில் இருந்து தொடங்கி, ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஒலிப்பதிவாளர், என சினிமா உலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவிட்டார். மேலும் இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை ஆற்றலின் மூலம் ரசிகர்களை கவர்த்தவர்.

-விளம்பரம்-

இப்படிபட்ட நிலையில் தான் கோயம்பத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஸ்கி பிராமின சமூகத்தை பற்றி பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில் “பிராமின்” என்பதும் “பிரம்மன்” என்பதும் ஒரே மாதிரியாக ஒலிக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

பிராமணர்கள் பற்றி பாஸ்கி :

மேலும் பிராமணர் சமூகத்தை பற்றி கூறுகையில் படைப்புக்கு “பிரம்மன்” என்று சொல்லுவார்கள். “பிராமணர்கள்” மற்றும் “பிரம்மா” இரண்டுமே ஒரே மாதிரியாக ஒலிக்கின்றது. எனவே இரண்டிற்கு எந்த வித்தியாசமும் கிடையாது. படைப்பாற்றலும் பேர் போன சமூகம் பிராமணர் சமூகம் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் தாம் இந்த உலகிலேயே சுப்பீரிம் சமூகத்தினர் என்று கூறினார். இவர் இப்படி கூறியது சோசியல் மீடியாவில் பெரிய சர்ச்சையாக மாறி கடுமையான விமர்சங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு :

இப்படி பட்ட நிலையில் தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இதனை பற்றி கூறியுள்ளார். அந்த பதிவில் “நகைச்சுவையாளர் பாஸ்கி பேசிய ஒரு காணொலிப் பகுதியை ஒருவர் அனுப்பியிருந்தார். பார்த்தேன், சிரித்தேன், அவர் நகைச்சுவை உணர்வை எப்போதும் போலதான் ரசித்தேன்! அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. மாறாக, ஒரு உண்மையைஎனக்கு நினைவூட்டியது என்றே சொல்லலாம்.”Creativity-யில் பிராமணர்தான் supreme community” என்கிறார். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

-விளம்பரம்-

அணைத்து துறையிலும் சிறந்து விளங்குவது பிராமனரே :

செவ்விசை வாய்ப்பாட்டு, வாத்திய இசை, திரைப்பட இசையமைப்பு, வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடகியர், இயக்குநர், நடிகர், நடிகையர், விளையாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அறிவியல், பொருளாதாரம், நீதித்துறை என எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குபவர் பெரும்பாலும் பிராமணரே.இது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே? அதை அவர் சொல்லும்போது எந்த அடிப்படையில் மறுக்கமுடியும்? ஏன் மறுக்கவேண்டும்?

எனக்கு உடல்பாடிலை :

அது எனக்குக் கோபத்தையோ, வெறுப்பையோ வரவழைத்தால் அது என் கையாலாகாத்தனம். அவர்களோடு போட்டியிட நான் என்னைத் தயார்செய்து கொள்வேன், அல்லது ஒதுங்கிவிடுவேன். அவர்களிடமிருந்து நான் பல நல்ல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதைத்தாண்டி, அவர்கள் மற்றவர் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டு காலங்காலமாகவே உண்டு. அதில் எனக்கு முழுவதும் உடன்பாடில்லை. அவர்களுக்கென சில பலங்கள் உண்டு.

தங்கள் கருத்துகளைத் தெளிவான விதத்தில் எடுத்துரைக்கும் வல்லமையும், கடுமையான கருத்துகளையும் நயமாக எடுத்து வைப்பதும், பிடிக்காதவரைக் கூட புன்முறுவலோடு எதிர்கொள்வதும், ஒரு கூட்டத்தில் தங்கள் சாமர்த்தியத்தால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், அவமானங்களைத் துடைத்தெறிந்து விட்டு இலக்கில் குறியாக இருப்பதும் சில எடுத்துக்காட்டுகள்.

இந்த பலங்களை அவர்கள் சரியான இடத்தில், சரியான தருணத்தில் வெளிப்படுத்தி வெற்றியடைகிறார்கள். அந்த உத்திகளை நாம் பயின்றுகொள்ள வேண்டும். இயலாவிட்டால் நம் பாணியில் அமைதியாகத் தொடரவேண்டும். எனக்கு வேகமாக ஓடும் திறமை இருக்கவேண்டும், அல்லது அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னை விட வேகமாக ஓடக்கூடியவனை நான் எப்படிக் குற்றப்படுத்த முடியும்? என்று ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டிருந்தார் அதற்கு பதிலடிகள் வந்த வன்னமாக இருக்கிறது.

Advertisement